தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சர்ஜாபூரில் போக்குவரத்து பிரச்னையை தீர்க்க மெட்ரோ ரயில் மட்டுமே தீர்வு: அமைச்சர் கருத்து

சர்ஜாபூரில் போக்குவரத்து பிரச்னையை தீர்க்க மெட்ரோ ரயில் மட்டுமே தீர்வு: அமைச்சர் கருத்து

சர்ஜாபூரில் போக்குவரத்து பிரச்னையை தீர்க்க மெட்ரோ ரயில் மட்டுமே தீர்வு: அமைச்சர் கருத்து


UPDATED : நவ 12, 2026 12:00 AM

ADDED : நவ 11, 2026 11:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 12:00 AM ADDED : நவ 11, 2026 11:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ‘‘சர்ஜாபூரில் போக்குவரத்து பிரச்னையை தீர்க்க, மெட்ரோ ரயில் இயக்கப்படுவது மட்டுமே ஒரே தீர்வு,’’ என, பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா கூறியுள்ளார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

காலேன அக்ரஹாரா – தாவரகெரே இடையே, 7.50 கி.மீ., துார மெட்ரோ சேவையை 13ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். 14ம் தேதி காலை 6:00 மணியில் இருந்து அந்த வழித்தடத்தில் ரயில் சேவை முழுமையாக பயன்பாட்டிற்கு வரும். ஆரம்ப நாட்களில், 8 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்படும்.

இதனால், பெங்களூரின் மெட்ரோ வலையமைப்பு, 103 கி.மீ., துாரத்தை எட்டும். 100 கி.மீ., துாரத்தை கடக்கும் சாதனை எட்டப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் 400 முதல், 500 கி.மீ., துார மெட்ரோ பாதையை உருவாக்கும் நோக்கம் உள்ளது.

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 170 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ வலையமைப்பை விரிவுபடுத்துவது அரசின் இலக்கு.

சில்க் போர்டு – கே.ஆர்.புரம்; ஹெப்பால் – விமான நிலையம் இடையில் அடுத்த ஆண்டு ரயில் சேவை துவங்கும் திட்டம் உள்ளது. ஜே.பி.நகர் 4 வது கட்டம் – ஹெப்பால்; ஒசஹள்ளி – கடபகெரே இடையிலான வழித்தட பணிகளிலும் அடுத்த ஆறு மாதங்களில் துவங்கும் திட்டம் உள்ளது.

சர்ஜாபூர் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி. அங்கு நிலவும் போக்குவரத்து பிரச்னைக்கு மெட்ரோ ரயில் மட்டுமே தீர்வு. ஹெப்பால் – சர்ஜாபூர் மெட்ரோ வழித்தடத்திற்கு ஒப்புதல் கேட்டு மத்திய அரசிடம் விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்துள்ளோம். ஒப்புதல் கிடைத்தால், அடுத்த ஆண்டு இறுதிக்குள் டெண்டர் விட்டு பணிகளை துவக்க இலக்கு நிர்ணயம் செய்து உள்ளோம்.

காலேன அக்ரஹாரா – தாவரகெரே ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைக்கும் நேரத்தில், பட்டய கணக்கர் பதவிக்கு தேர்வு நடக்கிறது. நிகழ்ச்சி நடக்கும் இடங்களை சுற்றி தேர்வு மையங்கள் உள்ளதா என்று பார்ப்போம்.

அங்கு மாணவர்கள் எந்த இடையூம் இல்லாமல் செல்ல ஏற்பாடுகள் செய்வோம். பிரதமர் அலுவலகம் வழங்கிய அட்டவணைப்படி நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு உள்ளதால், கடைசி நேரத்தில் மாற்றுவது கடினம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us