பார்ட்டியில் போதை பயன்பாடு? 50 பேரின் ரத்த மாதிரி சேகரிப்பு
பார்ட்டியில் போதை பயன்பாடு? 50 பேரின் ரத்த மாதிரி சேகரிப்பு
UPDATED : நவ 12, 2026 12:00 AM
ADDED : நவ 11, 2026 11:28 PM
மாரத்தஹள்ளி: ஒரு வீட்டில் நடந்த பார்ட்டியில் போதை பொருள் பயன்படுத்தியதாக, 50 பேரின் ரத்த மாதிரிகளை, போலீசார் சேகரித்துள்ளனர்.
பெங்களூரின் மாரத்தஹள்ளி கரியம்மன அக்ரஹாரா பகுதியில் உள்ள வீட்டில், தீபாவளி என்ற பெயரில் நீச்சல் குளத்தில் பார்ட்டி நடப்பதாக, கடந்த 9ம் தேதி இரவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்று பார்த்த போது, 50 பேர் பார்ட்டியில் ஈடுபட்டிருந்தது தெரிந்தது. தடை செய்யப்பட்ட ஹுட்கா, மது பாட்டில்கள், போதை பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன.
பார்ட்டியை ஏற்பாடு செய்த அரிஹந்த் பாண்டே, அபினவ் பாண்டே, பார்த்தா கைது செய்யப்பட்டனர்.
பார்ட்டியில் பங்கேற்ற இளம்பெண்கள், வாலிபர்கள், தம்பதிகள் என 50 பேர் போதை பயன்படுத்தினரா என்று கண்டறிய அவர்கள் ரத்த மாதிரிகளை போலீசார் சேகரித்தனர். ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்.
