sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 தேசியக் கொடியை அவமதித்த சிவகுமார் பா.ஜ., - ம.ஜ.த., குற்றச்சாட்டு

/

 தேசியக் கொடியை அவமதித்த சிவகுமார் பா.ஜ., - ம.ஜ.த., குற்றச்சாட்டு

 தேசியக் கொடியை அவமதித்த சிவகுமார் பா.ஜ., - ம.ஜ.த., குற்றச்சாட்டு

 தேசியக் கொடியை அவமதித்த சிவகுமார் பா.ஜ., - ம.ஜ.த., குற்றச்சாட்டு


ADDED : ஜன 28, 2026 06:49 AM

Google News

ADDED : ஜன 28, 2026 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராம்நகர்: தேசியக் கொடி, ஹிந்து மத தெய்வ வடிவ கோலங்களை துணை முதல்வர் சிவகுமார் மிதித்து அவமதிப்பு செய்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளது.

ராம்நகரில் குடியரசு தினத்தையொட்டி நேற்று முன்தினம் கோலப்போட்டி நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பங்கேற்று, தேசபக்தியை எடுத்துரைக்கும் வகையில் கோலங்கள் போட்டனர். பல கோலங்களில் தேசியக் கொடி, ஹிந்து மத தெய்வ வடிவங்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த கோலப்போட்டியை பார்க்க துணை முதல்வர் சிவகுமாரும், அவரது தம்பி சுரேஷும் சென்றனர். அப்போது, தேசியக் கொடி, பிள்ளையார் உருவ கோலங்களின் மீது 'ஷூ' காலால் சிவகுமார் நடந்து சென்றார்.

இது குறித்த வீடியோவை வெளியிட்ட ம.ஜ.த., - பா.ஜ., சமூக வலைத்தளங்களில் கூறியுள்ளதாவது:

தேசியக் கொடி என்பது நம் நாட்டின் அடையாளம். அப்படி இருக்கையில், தேசியக் கொடி மற்றும் ஹிந்து மத தெய்வ வடிவங்களை சிவகுமார் அவமதித்து உள்ளார். தேசபக்தி என்பது, தேர்தல் நேரங்களில் காங்கிரஸ் உறுப்பினர்கள் போடும் முகமூடியே. உண்மையான தேசப்பற்று இருப்பவர்கள் யாரும் இப்படி செய்யமாட்டார்கள். காங்கிரஸ் தலைவர்களின் ஆணவத்தை அடுத்த சட்டசபை தேர்தலில் மக்கள் விரட்டி அடிப்பர். அதிகாரம் என்பது ஆணவமாக நடந்து கொள்வதற்கல்ல. மாறாக, மக்களுக்கு சேவை செய்வதற்கே. இதை காங்கிரஸ் தலைவர்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us