/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ., - எம்.எல்.ஏ.,வை மிரட்டியவர் கைது
/
பா.ஜ., - எம்.எல்.ஏ.,வை மிரட்டியவர் கைது
ADDED : செப் 14, 2025 04:37 AM

பீதர்: பா.ஜ., - எம்.எல்.ஏ., பிரபு சவுஹானுக்கு, ஆபாச வீடியோ அனுப்பி, பணம் கேட்டு மிரட்டியவர், ஹைதராபாதில் கைது செய்யப்பட்டார்.
பீதரின் அவுராத் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., பிரபு சவுஹான். இவரது போட்டோவை, வேறு ஒரு இளம்பெண்ணுடன் இணைத்து எடிட் செய்து தயாரிக்கப்பட்ட, ஆபாச வீடியோ சில நாட்களுக்கு முன்பு, பிரபு சவுஹானின் மொபைல் போனுக்கு வந்தது.
சிறிது நேரத்தில் அவரை தொடர்பு கொண்டு பேசிய நபர், 30,000 ரூபாய் பணம் கொடுக்காவிட்டால், வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டினார். இதுதொடர்பாக, செப்டம்பர் 8ம் தேதி, ஹொக்ரானா போலீஸ் நிலையத்தில், பிரபு சவுஹான் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆபாச வீடியோ தயாரித்தது, பீதரின், நந்தி கிஜலாகாவ் கிராமத்தில் வசிக்கும் விகாஸ் பவார், 30, என்பதை கண்டுபிடித்தனர். போலீஸ் தேடுவதை அறிந்த அவர் தலைமறைவானார்.
ஹைதராபாத்தில் நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.