sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 மைசூரு - குஷால் நகர் ரயில் பாதை மீண்டும் துவக்க மத்திய அமைச்சரிடம் பா.ஜ., - எம்.பி., வேண்டுகோள்

/

 மைசூரு - குஷால் நகர் ரயில் பாதை மீண்டும் துவக்க மத்திய அமைச்சரிடம் பா.ஜ., - எம்.பி., வேண்டுகோள்

 மைசூரு - குஷால் நகர் ரயில் பாதை மீண்டும் துவக்க மத்திய அமைச்சரிடம் பா.ஜ., - எம்.பி., வேண்டுகோள்

 மைசூரு - குஷால் நகர் ரயில் பாதை மீண்டும் துவக்க மத்திய அமைச்சரிடம் பா.ஜ., - எம்.பி., வேண்டுகோள்


ADDED : பிப் 12, 2026 05:35 AM

Google News

ADDED : பிப் 12, 2026 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ரத்து செய்யப்பட்ட மைசூரு - குஷால் நகர் ரயில் பாதை திட்டத்தை மீண்டும் துவங்க வேண்டும்' என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர் வேண்டுகோள் விடுத்தார்.

புதுடில்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை, மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் மனு வழங்கினார்.

அப்போது யதுவீர், 'மைசூரு - குஷால் நகர் இடையே ரயில்பாதை அமைக்க, 2019 ல் மத்திய அரசு, 1,854.62 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளித்தது. 2022 - 23க்கான மத்திய பட்ஜெட்டில், இத்திட்டத்துக்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கியது. ஆனால் பல்வேறு காரணங்களால், திட்டம் ரத்து செய்யப்பட்டது. நீங்கள் உடனடியாக தலையிட்டு, மீண்டும் இத்திட்டத்தை துவங்க வேண்டும்.

குடகு மாவட்டத்தில் ரயில் இணைப்பு இல்லாததால், சுற்றுலா மற்றும் தோட்டக்கலை சார்ந்த பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

விவசாயிகள், சாலை போக்குவரத்தையே நம்பி உள்ளனர். இத்திட்டம் நிறைவடைந்தால், குடகில் நிலையான சுற்றுலாவுக்கு குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடையும். மைசூரு - பெங்களூரு வழித்தடத்தில் குடகு மாவட்டத்தின் விவசாயம், தோட்டக்கலை துறையும் வளரும்.

நடப்பாண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சென்னை - பெங்களூரு அதிவேக ரயில் திட்டத்தில், மைசூரை சேர்க்க வலியுறுத்தினேன். ஆனால் மைசூரு ஒதுக்கப்பட்டது கவலை அளிக்கிறது.

மைசூரு முக்கிய சுற்றுலா தலமாகவும், வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப மையமாகவும் மாறி வருகிறது. சென்னை - பெங்களூரு பொருளாதார வழித்தடத்தில் ஒருங்கிணைக்கப்படுவதற்கு மைசூரு தகுதியானது' என்றார்.

தகுந்த முடிவு எடுப்பதாக மத்திய அமைச்சரும் உறுதி அளித்தார்.

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மனு கொடுத்த மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர்.

- நமது நிருபர் -:






      Dinamalar
      Follow us