/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அமாவாசை, பவுர்ணமி வித்தியாசம் முதல்வருக்கு பா.ஜ., - எம்.பி., பதிலடி
/
அமாவாசை, பவுர்ணமி வித்தியாசம் முதல்வருக்கு பா.ஜ., - எம்.பி., பதிலடி
அமாவாசை, பவுர்ணமி வித்தியாசம் முதல்வருக்கு பா.ஜ., - எம்.பி., பதிலடி
அமாவாசை, பவுர்ணமி வித்தியாசம் முதல்வருக்கு பா.ஜ., - எம்.பி., பதிலடி
ADDED : அக் 23, 2025 11:14 PM

பெங்களூரு: ''சூரியன், சந்திரன், அமாவாசை, பவுர்ணமிக்கு உள்ள வித்தியாசத்தை முதல்வருக்கு கற்றுக்கொடுங்கள்,'' என, பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
முதல்வர் சித்தராமையா, என்னை பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்துள்ளார். இது அவரின் பதவிக்கு அழகல்ல. இதற்கு முன்னர் தேர்தல்களின் போதும் என்னை விமர்சித்தார்.
மூத்த அரசியல் தலைவரான அவருக்கு அமாவாசைக்கும், பவுர்ணமிக்கும் வித்தியாசம் தெரியவில்லை. முதலில் சூரியனுக்கும், சந்திரனுக்கும், அமாவாசைக்கும், பவுர்ணமிக்கும் என்ன வித்தியாசம் என்பதை அவருக்கு தெளிப்படுத்துங்கள். இதை தெரிந்து கொண்டு, அறிக்கைகள் வெளியிடட்டும். சூரியன் எப்போதுமே இருப்பார். இந்த அடிப்படைகளை புரிந்து கொண்டு அவர் பேசட்டும்.
என்னாலும் சித்தராமையாவை விமர்சிக்க முடியும். அது என்னுடைய கலாசாரம் அல்ல; எங்கள் கட்சியின் கலாசாரமும் அல்ல. சித்தராமையாவின் நிர்வாகம் மங்கி போய்விட்டது. பள்ளங்கள் இல்லாத சாலையே இல்லை. சாலைகளை பார்த்தால் அரசு நிர்வாகம் எப்படி என்பது உங்களுக்கு தெரியும். இது தான் அவரின் அணுகுமுறை.
பெங்களூரில் 1 கி.மீ., சாலையும், அரை கி.மீ., நடைபாதையும் சரியில்லை. நீங்கள் பிரதமரை கேள்வி கேட்கிறீர்கள். பெங்களூரில் ஒரு வாரத்தில் மூன்று பலாத்காரம், கொலைகள் நடந்துள்ளன. மைசூரில் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதை பற்றி அவர்கள் பேசவில்லை.
உள்துறை அமைச்சரோ பந்தயம் கட்டுவதில் மும்முரமாக உள்ளார். ஆந்திர மாநிலத்தில் 1.33 லட்சம் கோடி ரூபாயில், கூகுள் நிறுவனம் தன் 'ஏஐ' மையத்தை நிறுவ முதலீடு செய்துள்ளது. ஆனால், மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சரோ, ஆர்.எஸ்.எஸ்.,க்கு தடை விதிப்பதில் மும்முரமாக உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

