/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல்வர், துணை முதல்வரை கண்டித்து 13ல் பெங்களூரில் பா.ஜ., போராட்டம்
/
முதல்வர், துணை முதல்வரை கண்டித்து 13ல் பெங்களூரில் பா.ஜ., போராட்டம்
முதல்வர், துணை முதல்வரை கண்டித்து 13ல் பெங்களூரில் பா.ஜ., போராட்டம்
முதல்வர், துணை முதல்வரை கண்டித்து 13ல் பெங்களூரில் பா.ஜ., போராட்டம்
ADDED : ஜூன் 11, 2025 08:10 AM

ஷிவமொக்கா: கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக முதல்வர் சித்தராமையாவுக்கு, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கடிதம் எழுதி உள்ளார்.
இதுதொடர்பாக ஷிவமொக்காவில் நேற்று விஜயேந்திரா அளித்த பேட்டி:
முதல்வரை திட்டவோ, அரசியல் செய்வதற்காகவோ, பகிரங்கமாக இந்த கடிதம் எழுதவில்லை. மாநில மக்களின் உணர்வை, நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
கூட்ட நெரிசலில் சிக்கி, உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினரின் உணர்வுகளை முதல்வரும், துணை முதல்வரும் புரிந்து கொள்ள, இந்த கடிதம் எழுதினேன்.
இந்த கடிதத்தை பார்த்த பின், அவர்கள் என் கேள்விக்கு பதிலளிப்பார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் அதிகாரத்தின் கோரமான பிடியில் உள்ளனர். தற்போது காங்கிரஸ் மேலிடம், முதல்வரையும், துணை முதல்வரையும் புதுடில்லிக்கு அழைத்து உள்ளது. இவ்விருவரின் ராஜினாமாக்களை கட்சி தலைமை ஏற்காது என்று நினைக்கிறேன்.
'முடா' முறைகேட்டில் என்ன நடந்தது என்பதை கடந்த காலத்தில் பார்த்தோம். இருவரும் இப்பதவியில் நீடித்தால், மாநிலத்தின் கவுரவம் பாழாகிவிடும்.
வரும் 13ம் தேதி மக்கள் விரோத அரசுக்கு எதிராக, பெங்களூரு சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்தப்படும். இதில், 10 முதல் 13 ஆயிரம் பேர் பங்கேற்பர். அதுபோன்று கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்பர் என நினைக்கிறோம். அன்று முதல்வரின் வீட்டை முற்றுகையிட உள்ளோம். ஜூன் 16ல், இரண்டாம் கட்ட போராட்டம் நடத்துவோம்.
கூட்ட நெரிசல் சம்பவத்தில் முதல்வர், துணை முதல்வர், உள்துறை அமைச்சர் ஆகியோர் முறையே ஏ1, ஏ2, ஏ3 என்று குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளனர்.
விசாரணைக்கு பணியில் இருக்கும் நீதிபதியை நியமித்தால், அவர்கள் விரும்பும் அறிக்கையை பெற முடியாது. எனவே தான், ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்துள்ளனர். பணியில் இருக்கும் நீதிபதியையே நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.