/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எஸ்.சி., உள் இட ஒதுக்கீடு விவகாரம் 'செய் அல்லது செத்து மடி' என்கிறது பா.ஜ.,
/
எஸ்.சி., உள் இட ஒதுக்கீடு விவகாரம் 'செய் அல்லது செத்து மடி' என்கிறது பா.ஜ.,
எஸ்.சி., உள் இட ஒதுக்கீடு விவகாரம் 'செய் அல்லது செத்து மடி' என்கிறது பா.ஜ.,
எஸ்.சி., உள் இட ஒதுக்கீடு விவகாரம் 'செய் அல்லது செத்து மடி' என்கிறது பா.ஜ.,
ADDED : ஜூலை 23, 2025 08:43 AM

கர்நாடகாவில் எஸ்.சி., சமூகத்தினருக்கான உள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி, மாநில பா.ஜ., வரும் 1ம் தேதி முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த சட்டசபை தேர்தலின்போது, எஸ்.சி., சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதாக காங்கிரஸ் தன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதை நிறைவேற்றுவதற்காக, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தது.
குளறுபடி இந்த கணக்கெடுப்பின்போது நடந்த குளறுபடிகளுக்கு அளவே இல்லை என கூறலாம். பெங்களூரில் எஸ்.சி., கணக்கெடுக்கும் பணிகளின்போது, வீடுகளின் முன்புறத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. ஏராளமான வீடுகளில் கணக்கெடுப்பு நடத்தாமலேயே வெறும் ஸ்டிக்கரை மட்டும் ஒட்டிச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நீட்டிப்பு அரசின் மீது ஏற்பட்ட களங்கத்தை துடைக்க, அனைவரையும் ஆச்சரியப்படும் விதத்தில் மாநகராட்சி விளக்கத்தை கொடுத்தது. அது என்னவென்றா ல், 'ஸ்டிக்கர் ஒட்டினால் கணக்கெடுப்பு நடந்ததாக அர்த்தம் கிடையாது' என கூறியது.
இதெல்லாம் நம்புற மாதிரி யா இருக்கிறது என, பலரும் சமூக வலைதளங்களில் கேலி செய்தனர். அதுபோல, கணக்கெடுக்கும் பணிக்காகன அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது. இதுவரை, உள் இட ஒதுக்கீடு பணிகள் என்ன ஆனது; எப்போது, அமல்படுத்தப்படும் என கேள்விகளுக்கு மாநில அரசிடம் இருந்து பதில் வந்த பாடில்லை.
இதுகுறித்து, எதிர்க்கட்சியான பா.ஜ.,வும் பல முறை கேள்விகளை எழுப்பி பார்த்தது. ஆனால், மாநில அரசோ மவுனம் சாதித்து வருகிறது. இதை எதிர்த்து, காங்கிரசுக்கு பாடம் புகட்டவும், உள் இட ஒதுக்கீடை விரைவில் அமல்படுத்தவும், அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் பா.ஜ., திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து, பா.ஜ., தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான நாராயணசாமி, சித்ரதுர்கா பா.ஜ., - எம்.பி., கோவிந்த் கார்ஜோள் ஆகியோர் தலைமையில், நேற்று பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
30 ஆண்டு காலம் நாராயணசாமி கூறியதாவது:
உள் இட ஒதுக்கீடு குறித்த அறிக்கை, அமைச்சரவையில் வரும் 10ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இல்லையெனில், மாநிலத்தில் உள்ள மடிகா சமூகத்தை சேர்ந்தோர் பந்த் நடத்துவர். மடிகா சமூகத்தை சேர்ந்தோர் உள் இட ஒதுக்கீடுக்காக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சை மீறி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி உள்ளார். அதேபோல ஆந்திரா, பஞ்சாப் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
போராட்டம் நாகமோகன்தாஸ் ஆணையத்துக்கு மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதை நிரூபிக்க பல ஆவணங்கள் உள்ளன. நாகமோகன்தாசும் கணக்கெடுப்பு குறித்து தெளிவாக எதையும் குறிப்பிடவில்லை.
அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் மிக பெரிய போராட்டம் நடத்தப்படும். 'செய் அல்லது செத்து மடி' எனும் தலைப்பில் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக கோவிந்த் கார்ஜோள் கூறுகையில், “உள் இட ஒதுக்கீடு குறித்து, நாகமோகன்தாஸ் கமிஷனுக்கு கடிதம் எழுதினேன். அதற்கு எந்த பதிலும் வரவில்லை,” என்றார்.
- நமது நிருபர் -