தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/காங்கிரஸ் அரசை கண்டித்து இன்று முதல் பா.ஜ., போராட்டம்

காங்கிரஸ் அரசை கண்டித்து இன்று முதல் பா.ஜ., போராட்டம்

காங்கிரஸ் அரசை கண்டித்து இன்று முதல் பா.ஜ., போராட்டம்


UPDATED : நவ 22, 2026 12:00 AM

ADDED : நவ 21, 2026 08:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 12:00 AM ADDED : நவ 21, 2026 08:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹூப்பள்ளி: ‘‘காங்கிரஸ் அரசின் தோல்விகளை கண்டித்து நாளை முதல் – இன்று முதல், வரும் 25ம் தேதி வரை மாநிலம் முழுதும் பா.ஜ., சார்பில் போராட்டம் நடத்தப்படும்,’’ என, சித்ரதுர்கா தொகுதி பா.ஜ., – எம்.பி., கோவிந்த் கார்ஜோள் கூறி உள்ளார்.

நேற்று அவர் அளித்த பேட்டி:

கர்நாடகாவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் முன்னுரிமை அளிக்கவில்லை. மாநிலத்தில் ஊழல் அதிகரித்து விட்டது. விவசாயிகள் கஷ்டத்தில் உள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில், 3,500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தண்ணீர் இல்லாததால் ஆடு, மாடுகளை விவசாயிகள் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

கர்நாடகாவில் பால், தயிர், பஸ் டிக்கெட், மின்சாரம் ஆகியவற்றின் விலை உயர்வு, சாமானியர்களை கடுமையாக பாதித்துள்ளது. விவசாயிகளுக்கு போதுமான மின்சாரம் கிடைப்பதில்லை. மாநில அரசின் கஜானா காலியாகிவிட்டது. இதனால், பல்வேறு விதங்களில் வரி விதித்து, அதன் மூலம் கஜானாவை நிரப்ப காங்கிரஸ் அரசு முயல்கிறது.

எஸ்.சி., – எஸ்.டி., சமூகங்களின் மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி, வாக்குறுதி திட்டங்களுக்கு செயல்படுத்தப்பட்டு உள்ளது. இது, பட்டியல் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி.

காங்கிரஸ் அரசின் தோல்வி, விலை உயர்வு, விவசாயிகள் பிரச்னைகள், அமைச்சர்களின் ஊழல் ஆகியவற்றை கண்டித்து, மாநிலம் முழுதும் நாளை முதல், 25ம் தேதி வரை பா.ஜ., சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us