/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சட்டசபை தேர்தலில் 156 இடங்களில் பா.ஜ., வெற்றி; ஹைதராபாத் தனியார் நிறுவனம் ஆய்வில் பரபரப்பு
/
சட்டசபை தேர்தலில் 156 இடங்களில் பா.ஜ., வெற்றி; ஹைதராபாத் தனியார் நிறுவனம் ஆய்வில் பரபரப்பு
சட்டசபை தேர்தலில் 156 இடங்களில் பா.ஜ., வெற்றி; ஹைதராபாத் தனியார் நிறுவனம் ஆய்வில் பரபரப்பு
சட்டசபை தேர்தலில் 156 இடங்களில் பா.ஜ., வெற்றி; ஹைதராபாத் தனியார் நிறுவனம் ஆய்வில் பரபரப்பு
ADDED : மே 26, 2025 12:54 AM
'கர்நாடகாவில் தற்போதைய காலகட்டத்தில் சட்டசபை தேர்தல் நடந்தால், பா.ஜ., 136 முதல் 159 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும்.
'காங்கிரஸ் 62 இடங்களிலும், ம.ஜ.த., 3 முதல் ஆறு இடங்களிலும் வெற்றி பெறும். அனைவருக்கும் பிடித்த முதல்வராக சித்தராமையா உள்ளார்' என்று ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்து உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன. காங்கிரசின் சாதனை மாநாடும் நடந்து முடிந்துள்ளது.
வாக்குறு திட்டங்களுக்காக, பட்ஜெட்டில் 56,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால், தொகுதியில் வளர்ச்சி பணிகள் நடக்காமல், பொது மக்கள் கேள்வி எழுப்புவதாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களே புலம்பி வருகின்றனர்.
இந்நிலையில், ஹைதராபாத்தை சேர்ந்த, 'பீப்பிள்ஸ் பல்ஸ்' என்ற தனியார் அமைப்பு, கடந்த ஒரு மாதமாக கர்நாடகாவில் 10,481 பேரிடம் ஆய்வு நடத்தியது.
பா.ஜ., வெற்றி
ஆய்வு முடிவில் வெளியான தகவல்கள்:
கர்நாடகாவில் தற்போதைய சூழ்நிலையில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டால், 136 முதல் 159 இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும். 2023ல் 36 சதவீதம் பெற்றது. தற்போது, 51 சதவீதமாக அதிகரிக்கும்.
தற்போது காங்கிரஸ் அரசுக்கு எதிரான அலை வீசுவதால், காங்கிரஸ் 62 முதல் 82 இடங்களிலும் வெற்றி பெறும். 2023ல் பெற்ற 42.88 சதவீதம் ஓட்டு குறைந்து, 40.3 சதவீதம் பெறும் என்று கூறப்பட்டு உள்ளது.
வழக்கம் போல், ம.ஜ.த., ஐந்து சதவீத ஓட்டுகளுடன் 3 முதல் 6 இடங்களில் வெற்றி பெறும். கடந்த தேர்தலில் 18.3 சதவீதம் ஓட்டு பெற்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த 20 ஆண்டுகளாக கர்நாடகாவில் 2004, 2008, 2018 ஆகிய ஆட்சி காலத்தில் பா.ஜ., பெரிய கட்சியாக விளங்கியது. ஆனாலும், பெரும்பான்மைக்கு தேவையான 113 இடத்தை பெற முடியவில்லை. ஒவ்வொரு முறையும் 'ஆப்பரேஷன் தாமரை' நடத்தி, ஆட்சியை பிடித்தது.
முதல்வர்
அதுபோன்று, யார் முதல்வராக இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு, சித்தராமையாவுக்கு 29.2 சதவீதம்; சிவகுமாருக்கு 10.7 சதவீதம்; குமாரசாமிக்கு 7.6 சதவீதம்; சக்தி வாய்ந்த நபராக திகழ்ந்த எடியூரப்பாவுக்கு 5.5 சதவீதம்; அவரது மகன் விஜயேந்திராவுக்கு 5.2 சதவீதம்; பசனகவுடா பாட்டீல் எத்னாலுக்கு 4.7 சதவீதம்; பசவராஜ் பொம்மைக்கு 3.6 சதவீதமும் ஆதரவு கிடைத்து உள்ளது.
காங்கிரஸ் அரசின் ஆட்சி நிர்வாகம் குறித்த கேள்விக்கு, நன்றாக உள்ளது என்று 48.4 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர்.
மாநில அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பை நம்புவதாக 26.3 சதவீதம் பேரும்; நம்ப முடியாது என்று 35.0 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
மாநில அரசின் ஐந்து வாக்குறுதி திட்டங்களில், கிரஹலட்சுமி திட்டத்துக்கு பெண்களிடம் அமோக ஆதரவு கிடைத்து உள்ளது.
இத்திட்டத்துக்கு 45.4 சதவீதம்; அன்னபாக்யாவுக்கு 17.0 சதவீதம்; கிரஹ ஜோதிக்கு 13.5 சதவீதம்; சக்திக்கு 19.1 சதவீதம்; யுவ நிதிக்கு 2.0 சதவீதம் ஆதரவு கிடைத்து உள்ளது. இத்திட்டம் குறித்து தெரியாது என்று 3.0 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர்.
மோடிக்கு ஆதரவு
நாட்டின் பிரதமராக யார் இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு, நரேந்தர மோடிக்கு 59.1 சதவீதம் பேரும்; ராகுலுக்கு 17.3 சதவீதம்; யோகி ஆதித்யநாத்துக்கு 10.9 சதவீதம்; மல்லிகார்ஜுன கார்கேவுக்கு 2.3 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
பா.ஜ.,வினரிடம் மோடிக்கு 73.9 சதவீதம்; யோகி ஆதித்யநாத்துக்கு 17.0 சதவீதம்; ராகுலுக்கு காங்கிரசின் 40.6 சதவீதம்; கார்கேவுக்கு 5.0 சதவீதம் பேர் ஆதரவு கிடைத்து உள்ளது.
மோடிக்கு ஹிந்துக்கள் 66.2 சதவீதம், கிறிஸ்துவர்கள் 41.2 சதவீதம், முஸ்லிம்கள் 19.7 சதவீதம்; ராகுலுக்கு ஹிந்துக்கள் 9.8 சதவீதம், கிறிஸ்துவர்கள் 40.5 சதவீதம், முஸ்லிம்கள் 59.5 சதவீதம் பேரும் ஆதரவு அளித்து உள்ளனர்.
- நமது நிருபர் -