/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
செல்வாக்கை குறைக்க முயற்சி பா.ஜ.,வின் சோமசேகர் 'ஐஸ்'
/
செல்வாக்கை குறைக்க முயற்சி பா.ஜ.,வின் சோமசேகர் 'ஐஸ்'
செல்வாக்கை குறைக்க முயற்சி பா.ஜ.,வின் சோமசேகர் 'ஐஸ்'
செல்வாக்கை குறைக்க முயற்சி பா.ஜ.,வின் சோமசேகர் 'ஐஸ்'
ADDED : ஏப் 19, 2025 05:25 AM

பெங்களூரு: ''அனைத்து சமுதாயங்களையும் ஒருங்கிணைத்து அழைத்துச் செல்லும் முதல்வர் சித்தராமையாவின் செல்வாக்கை குறைக்க முயற்சி நடக்கிறது,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர் 'ஐஸ்' வைத்தார்.
பெங்களூரு, கெங்கேரியின் சோடேனபுராவில் புதிதாக கட்டியுள்ள கலிதேவா கன்வென்ஷன் ஹாலை, முதல்வர் சித்தராமையா நேற்று திறந்து வைத்தார். இதில் பங்கேற்று பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர் பேசியதாவது:
'முடா'வில் முதல்வர் சித்தராமையா வெறும் 14 மனைகள் பெற்றிருந்தார். ஆனால் ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும், நுாற்றுக்கணக்கான மனைகள் பெற்றுக் கொண்டனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தப்படவில்லை. மக்கள் செல்வாக்குள்ள முதல்வர் சித்தராமையாவிடம் விசாரணை நடத்துகின்றனர்.
சித்தராமையா, நேர்கொண்ட பார்வை உடையவர். சிலர் உள்நோக்கத்துடன், அவருக்கு எதிராக சதி செய்கின்றனர். மாநில மக்களுக்கு ஐந்து வாக்குறுதித் திட்டங்களை கொடுத்துள்ளார். அவரை யாரும் எதுவும் செய்ய முடியாது.
அனைத்து சமுதாயங்களையும், ஒருங்கிணைத்து அழைத்துச் செல்கிறார். அவர் மீது அவப்பிரசாரம் செய்து, அவரது செல்வாக்கை குறைக்க முயற்சி நடக்கிறது. சாமுண்டீஸ்வரி அனைத்தையும் கவனிக்கிறார். முதல்வருக்கு சாமுண்டீஸ்வரியின் ஆசி உள்ளது.
என்னை அரசியல் ரீதியில் இந்த அளவுக்கு வளர்த்ததில், துணை முதல்வர் சிவகுமாரின் பங்களிப்பு அதிகம். அவர் எனக்கு பிடித்தமான தலைவர். பெங்களூரின் மேம்பாட்டுக்காக உழைக்கிறார்.
பெங்களூருக்கு பட்ஜெட்டில், கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் ஒயிட் டாப்பிங் பணிகள் நடத்துகிறார். ஆனால் இவர் மீது, சிலர் தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.
மாநில மேம்பாட்டுக்காக உழைக்கும் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஜாம்பவான்கள். இவர்கள் கர்நாடகாவின் சொத்து.
இவ்வாறு அவர் கூறினார்.

