ADDED : ஜூன் 14, 2026 11:33 PM
அ நிறம் | அளவு
தங்கவயல்: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான, 'பெமல்' எனும், 'பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்' தொழிற்சாலை மருத்துவமனையில், நேற்று ரத்த தான முகாம் நடந்தது.
பெமல் மேலாளர் யோகானந்தா பேசுகையில், ''ஓர் உயிரை காப்பாற்றுவதை விட மேலானது எதுவுமே இல்லை. ஆரோக்கியமான மக்கள், ரத்த தானம் செய்ய முன் வர வேண்டும். ரத்த தானம் செய்வதால் உடல் நலத்திற்கு எந்த விதமான பாதகமான விளைவுகளும் ஏற்படாது,'' என்றார்.
பெமல் மனித வளத்துறை அதிகாரி நீனா சிங் கூறுகையில், ''ரத்த தானம் செய்வோரின் ஆரோக்கியம் மேம்படும். ரத்த தானத்தால், பல உயிர்களை காப்பாற்றவும் முடியும். எனவே, ரத்த தானத்தின் அவசியத்தை தெரிந்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கும் தெரிவித்து ரத்த தானம் செய்யுமாறு வலியுறுத்த வேண்டும்,'' என்றார்.
முகாமில், 193 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.
