/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எலஹங்கா ஏரியில் படகு ஓட்டும் பயிற்சி
/
எலஹங்கா ஏரியில் படகு ஓட்டும் பயிற்சி
ADDED : ஆக 31, 2025 11:20 PM
எலஹங்கா: எலஹங்கா ஏரியில் வரும் 5 முதல் 7ம் தேதி வரை படகு ஓட்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பெங்களூரு மாநகராட்சி, ராயல் மைசூரு படகு ஓட்டும் கிளப்புடன் இணைந்து, படகு ஓட்டும் பயிற்சியை வழங்க உள்ளது. இந்த பயிற்சி எலஹங்கா ஏரியில் நடத்தப்படும். இதில் கலந்து கொள்வதற்கு கட்டணமாக 14,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
புதிதாக படகு ஓட்ட கற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் பயிற்சியில் இணையலாம். இதற்கு எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. இப்பயிற்சி வரும், 5 முதல் 7ம் தேதி வரை நடக்கிறது.
பயிற்சியில், படகு ஓட்டு வதற்கான அடிப்படை, துடுப்பு போடுவது, நீரில் வீழ்ந்தவரை எப்படி காப்பாற்றுவது போன்றவை கற்றுத்தரப்படும். இதில் வெற்றிகரமாக செயல்பட்டவர்கள், அடுத்த கட்ட பயிற்சிக்கு செல்வர் . இப்பயிற்சியில் சேர விரும்புவோர், ராயல் மைசூரு படகு ஓட்டும் கிளப்பின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்று, பதிவு செய்து கொள்ளலாம்.