UPDATED : அக் 27, 2026 12:00 AM
ADDED : அக் 26, 2026 10:14 PM
அ நிறம் | அளவு
சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்டம், சிருங்கேரி தாலுகாவின், குஞ்சேபைலு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ், 32. இவருக்கு ஐந்து நாட்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது. நேற்று காலை பணி நிமித்தமாக, சிருங்கேரிக்கு பைக்கில் புறப்பட்டார்.
மெனசே கிராமம் அருகில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் மோதியது. மோதிய வேகத்தில் பைக்கில் தீப்பிடித்தது. இதில் சிக்கிய நாகராஜ், தீயில் கருகி உயிரிழந்தார்.
பைக் மீது மோதிய பஸ், சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கி நின்றது. பயணியர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
