தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சாலை பணிகளை விரைந்து முடிக்க கிருஷ்ண பைரே கவுடா உத்தரவு

சாலை பணிகளை விரைந்து முடிக்க கிருஷ்ண பைரே கவுடா உத்தரவு

சாலை பணிகளை விரைந்து முடிக்க கிருஷ்ண பைரே கவுடா உத்தரவு


UPDATED : அக் 27, 2026 12:00 AM

ADDED : அக் 26, 2026 10:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 12:00 AM ADDED : அக் 26, 2026 10:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: சாலை பணிகளை விரைந்து முடிக்காமல் தாமதம் காட்டும் ஒப்பந்ததாரர்கள் மீது, பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

பெங்களூரின், ஹென்னுாரு – பாகலுாரு பிரதான சாலை ஜங்ஷனில் இருந்து, கெத்தலஹள்ளி வரையிலான சாலைகள் மற்றும் அங்கு நடந்து வரும் பணிகளை, அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா நேற்று ஆய்வு செய்தார்.

சாலை பணிகளை தாமதப்படுத்தும் ஒப்பந்ததாரர்களை கண்டித்தார். விரைவில் பணிகளை முடிக்கும்படி உத்தரவிட்டார்.

அதிகாரிகள் மத்தியில் அமைச்சர் பேசியதாவது:

சாலையில் வாகன போக்குவரத்தை சுமுகமாக்க வேண்டும். நடைபாதைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

பணிகள் நடக்கும் இடங்களில், பொது மக்களுக்கு தொந்தரவு ஏற்படாமல், பார்த்து கொள்ளுங்கள். பாக்கியுள்ள பணிகளை நிர்ணயித்த நேரத்துக்குள் முடியுங்கள்.

மழை நீர் தடையின்றி செல்லும்படி பார்த்து கொள்ளுங்கள். சாலைகளில் மழை நீர் தேங்கி நின்று, மக்கள் பாதிப்படைய கூடாது. சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பாதசாரிகள் பாதுகாப்பாக நடமாட வசதியாக, சேதமடைந்த நடைபாதைகளை சரி செய்யுங்கள். சாலை மேம்பாட்டு பணிகள் நடக்கும் இடங்களில், வாகன போக்குவரத்துக்கு சரியான வசதி செய்ய வேண்டும். மாற்று சாலைகளை அடையாளம் காணுங்கள். பணிகள் தரமாக இருக்க வேண்டும்.

அதிகாரிகள் அவ்வப்போது நேரில் சென்று, பணிகளின் தரத்தை ஆய்வு செய்யுங்கள். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த, முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us