/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பணிக்கு செல்லாமல் மொபைல் போன் பார்த்த அண்ணனை கொன்ற தம்பி கைது
/
பணிக்கு செல்லாமல் மொபைல் போன் பார்த்த அண்ணனை கொன்ற தம்பி கைது
பணிக்கு செல்லாமல் மொபைல் போன் பார்த்த அண்ணனை கொன்ற தம்பி கைது
பணிக்கு செல்லாமல் மொபைல் போன் பார்த்த அண்ணனை கொன்ற தம்பி கைது
ADDED : ஜூன் 15, 2025 03:57 AM

பெலகாவி: பெலகாவி மாவட்டம், ஹூக்கேரியின் ஹட்டியலுாரை சேர்ந்தவர் ராயப்பா சுரேஷ் கமதி, 28. இவரது தம்பிகள் பசவராஜ் கமதி, 24, துண்டப்பா. மே 8ம் தேதி ஆடு மேய்க்க ராயப்பா சென்றார். மாலையில் ஆடுகள் அவைகளாகவே வீட்டிற்கு திரும்பின. ஆனால், ராயப்பா வரவில்லை.
கவலை அடைந்த குடும்பத்தினர், பல இடங்களில் தேடினர். மறுநாள் காலை, கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணை நடத்திய போலீசார், சில தடயங்களை அடிப்படையாக கொண்டு, ராயப்பாவின் தம்பி பசவராஜ் கமதியிடம் விசாரித்தபோது, அண்ணனை கொன்றதை ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்த விசாரித்தபோது, குவைத்தில் பணியாற்ற சென்ற ராயப்பா, உடல் நலம் பாதிக்கப்பட்டு மீண்டும் கிராமத்துக்கு திரும்பினார். ஊர் திரும்பிய நாளில் இருந்து எந்த பணிக்கும் செல்லவில்லை. இது பசவராஜுக்கும் மற்றொரு சகோதரர் துண்டப்பாவுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. கொலை நடப்பதற்கு முந்தைய நாளும், சகோதரர்களுக்குள் சண்டை நடந்துள்ளது. மறுநாள் ஆடு மேய்க்க ராயப்பா சென்றார்.
முந்தைய நாள் நடந்த சண்டையில் கோபத்தில் இருந்த பசவராஜு, மறுநாள் அண்ணனை கொலை செய்ய, வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் மிளகாய் பொடியை எடுத்துச் சென்றார்.
ஆடு மேய்க்கும் இடத்தில் மரத்தின் அடியில் அமர்ந்து, ராயப்பா மொபைல் போன் பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த பசவராஜு, ராயப்பா முகத்தில் மிளகாய் பொடி துாவினார்.
கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்த ராயப்பா தலையில் கல்லைப் போட்டு பசவராஜ் கொலை செய்தார். பின், வீட்டுக்கு திரும்பினார். குடும்பத்தினருடன் சகோதரனை தேடுவது போன்று, இவரும் நடித்தார்.