/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைத்துனர் திட்டியதால் மச்சான் தற்கொலை
/
மைத்துனர் திட்டியதால் மச்சான் தற்கொலை
ADDED : ஜூலை 26, 2025 11:00 PM
பெலகாவி: மைத்துனரின் பேச்சால் மனம் நொந்த ஒருவர், மனைவி கண் முன்னே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
பெலகாவி மாவட்டத்தின், ஹொன்னிஹாளா கிராமத்தில் வசித்தவர் மல்லப்பா, 35. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஒற்றுமை இல்லை. குடும்ப பிரச்னை காரணமாக, அவ்வப்போது சண்டை போட்டுக் கொண்டனர்.
சில நாட்களுக்கு முன்பு, மல்லப்பாவின் வீட்டிற்கு மை த்துனர் மல்லிகார்ஜுன் வந்திருந்தார். அப்போதும் தம்பதிக்குள் சண்டை நடந்தது. தன் அக்காவுடன் சண்டை போட வேண்டாமென, மல்லப்பாவுக்கு மல்லிகார்ஜுன் புத்திமதி கூறினார்.
நேற்று காலை ஏதோ காரணத்தால், தம்பதிக்கு இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. இதை கண்டு கோபமடைந்த மல்லிகார்ஜுன், “நீ செத்து ஒழிந்தால், என் அக்கா நிம்மதியாக இருப்பார்,” என கூறினார்.
இதை கேட்டு மனம் நொந்த மல்லப்பா, மனைவி, மைத்துனர் கண் முன்னால் கூரான ஆயுதத்தால், தன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து அங்கு வந்த மாரிஹாளா போலீசார், விசாரணை நடத்துகின்றனர். மல்லப்பாவை தற்கொலைக்கு துாண்டியதாக மைத்துனர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.