ADDED : ஏப் 04, 2026 04:52 AM
அ நிறம் | அளவு
தேவனஹள்ளி: பெங்களூரு ரூரல் தேவனஹள்ளி தாலுகா ரெட்டிஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் வெங்கடேஷ். இவரது சித்தப்பா மகன் நாராயணசாமி. இருவரும் விவசாயிகள்.
மூதாதையர்கள் சொத்தை பிரிப்பது தொடர்பாக அண்ணன், தம்பி இடையில் பல ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. இருவரின் நிலமும் அருகருகே இருப்பதால், அங்கு செல்லும் போ து எல்லாம், இரு குடும்பத்தினரும் சண்டை போட்டு உள்ளனர்.
இந்நிலையில், நேற் று காலை வெங்கடேஷ் வீட்டில் வளர்த்த வேட்டை நாய், நாராயணசாமியின் விவசாய நிலத்திற்கு சென்று சுற்றி திரிந்தது. இதனால் அந்த நாய் மீது நாராயணசாமி கல் வீசினார்.
மீண்டும் மீண்டும் நாய் அங்கு வந்ததால், வீட்டிற்கு சென்று நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து நாயை சுட்டார். குண்டு பாய்ந்து நாய் பரிதாபமாக இறந்தது. நாராயணசாமி கைது செய்யப்பட்டார்.
