தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/‘பேயர்’ நிறுவனத்துடன் தொழில் ஒப்பந்தம்

‘பேயர்’ நிறுவனத்துடன் தொழில் ஒப்பந்தம்

‘பேயர்’ நிறுவனத்துடன் தொழில் ஒப்பந்தம்


ADDED : நவ 07, 2026 02:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2026 02:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: மருத்துவ சேவை மற்றும் விவசாயத் துறையில், பெயர் பெற்ற ஜெர்மனியின், ‘பேயர் சயின்ஸ் அண்ட் இன்னோவேஷன்’ நிறுவனம், பெங்களூரில் 200 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் து வங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.

பெரிய, நடுத்தர தொழிற்துறை அமைச்சர் எம்.பாட்டீல் முன்னிலையில், தொழிற்துறை முதன்மை செயலர் செல்வகுமார், பேயர் நிறுவனத்தின் சி.எப்.ஓ., வினித் ஜிந்தால் ஆகியோர், ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டனர்.

அமைச்சர் எம்.பி.பாட்டீல் அளித்த பேட்டி:

பேயர் நிறுவனம், அடுத்த ஏழு ஆண்டுகளில் படிப்படியாக, தொழிலில் முதலீடு செய்யும். இதனால் 220 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும். நான் சமீபத்தில் மாநிலத்துக்கு முதலீடு கொண்டு வர, நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். இந்த நிறுவன பிரதிநிதிகளுடன், பேச்சு நடத்தினேன்.

பேயர் நிறுவனம் உரம், பூச்சிக்கொல்லி மருந்து உட்பட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும். அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடக்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு முன்னரே, திட்டத்துக்கு பூமி பூஜை நடத்த, இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விரைந்து தொழில் துவக்க ஆர்வம் காட்டுகிறது.

இந்த நிறுவனம், ஏற்கனவே சாம்ராஜ்நகரில் விளைச்சல் பரிசோதனை மையம் வைத்துள்ளது. இந்தியாவில், 125 ஆண்டுகளாக செயல்படுகிறது. 11 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us