UPDATED : நவ 07, 2026 12:00 AM
ADDED : நவ 06, 2026 11:54 PM
அ நிறம் | அளவு
கலபுரகி: கல்லுாரி விடுதி கட்டடத்தில் இருந்து விழுந்து மாணவர் உயிரிழந்தார்.
கலபுரகி நகரின் ராஜாபுரா லே – அவுட்டில் உள்ள பிரபலமான கல்லுாரி ஒன்றில் பி.எஸ்சி., நர்சிங் படித்து வந்தவர் முஜாஹித் படேல், 25. இவர் கல்லுாரி விடுதியில் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை இவர், விடுதி கட்டடத்தின் நான்காவது மாடியில் இருந்து விழுந்து இறந்தார்.
இதையறிந்து, அங்கு வந்த பிரம்மாபுரா போலீசார், மாணவரின் உடலை மீட்டு, விசாரணையை துவக்கியுள்ளனர். சில நாட்களுக்கு முன், இதே கல்லுாரியில், மாணவர் ஒருவரை நிர்வாணமாக்கி தாக்குதல் நடத்தினர்.
