தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/முதல்வர் சிவகுமார் டில்லி பயணம் ஏன்?

முதல்வர் சிவகுமார் டில்லி பயணம் ஏன்?

முதல்வர் சிவகுமார் டில்லி பயணம் ஏன்?


UPDATED : நவ 07, 2026 02:31 AM

ADDED : நவ 06, 2026 11:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 02:31 AM ADDED : நவ 06, 2026 11:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: அமைச்சரவை விரிவாக்கம் குறித்து, மேலிட தலைவர்களுடன் ஆலோசிக்க, முதல்வர் சிவகுமார் டில்லி சென்றுள்ளார்.

முதல்வர் சிவகுமார் தலைமையிலான அமைச்சரவையில், இரண்டு இடங்கள் காலியாக உள்ளன. இதில் ஒரு இடம் பெண் எம்.எல்.ஏ.,க்களில் யாராவது ஒருவருக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் யாருக்கு வழங்குவது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

எம்.எல்.ஏ.,க்கள், லட்சுமி ஹெப்பால்கர், ரூபகலா, கனிஜா பாத்திமா, நயனா மோட்டம்மா, எம்.எல்.சி., காயத்ரி சாந்தேகவுடா இடையே போட்டி நிலவுகிறது.

இதுபோல, நாகேந்திரா ராஜினாமாவால் காலியான இடத்திற்கு, மீண்டும் அவரை கொண்டு வர முயற்சி நடக்கிறது. காலியாக உள்ள இரு இடங்களை நிரப்புவது குறித்து, கட்சி மேலிட தலைவர்களுடன் ஆலோசிக்க, சிவகுமார் நேற்று டில்லி புறப்பட்டு சென்றார்.

இன்று மேலிட தலைவர்களை சந்திக்கிறார்.

எம்.எல்.சி., தேர்தலில் நான்கு இடங்களில் தோல்வி ஏன், சித்தராமையா தொடர்பான வீடியோ வழக்கு விசாரணை உட்பட, பல விஷயங்கள் பற்றி, முதல்வர் சிவகுமார், டில்லி தலைவர்களுடன் பேச உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us