தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/காருக்குள் கிடந்த வியாபாரி உடல் சுட்டு கொலையா என விசாரணை

காருக்குள் கிடந்த வியாபாரி உடல் சுட்டு கொலையா என விசாரணை

காருக்குள் கிடந்த வியாபாரி உடல் சுட்டு கொலையா என விசாரணை


UPDATED : நவ 18, 2026 12:00 AM

ADDED : நவ 17, 2026 11:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 12:00 AM ADDED : நவ 17, 2026 11:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகலுார்: காருக்குள் வியாபாரி உடல் மீட்கப்பட்டது. துப்பாக்கி தோட்டா கண்டெடுக்கப்பட்டதால், சுட்டு கொல்லப்பட்டாரா என்று விசாரணை நடக்கிறது.

பெங்களூரு பாகலுார் அருகே மஞ்சப்பனஹள்ளி கிராமத்தில், நேற்று முன்தினம் மாலையில் இருந்து நேற்று மதியம் வரை, ஒரு கார் ஒரே இடத்தில் நின்றது. சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது, காரின் டிரைவர் இருக்கையில் ஒருவர் இறந்து கிடந்தார்.

இணை கமிஷனர் ரமேஷ் பானுத், டி.சி.பி., மிதுன்குமார், பாகலுார் போலீசார் சென்றனர். காரின் டயர் அருகில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தோட்டாவும் கண்டெடுக்கப்பட்டது.

இணை கமிஷனர் ரமேஷ் பானுத் கூறுகையில், ‘‘காருக்குள் இறந்து கிடந்தவர் பெயர் இம்ரான் பாஷா. பன்னர்கட்டா சாலையை சேர்ந்தவர். பழைய இரும்பு வியாபாரம் செய்தார். இறந்தவர் நெற்றியில் துப்பாக்கியால் சுட்டதற்கான அடையாளம் உள்ளது. அவரை யாராவது சுட்டு கொன்றனரா அல்லது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தாரா என விசாரணை நடக்கிறது. அவருக்கு யாருடனாவது பிரச்னை இருந்ததா என்றும் குடும்பத்தினரிடம் விசாரிக்கிறோம்,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us