/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ. 3 கோடி பெற்று 'கால்ஷீட்' மோசடி நடிகர் துருவா சர்ஜா மீது வழக்கு
/
ரூ. 3 கோடி பெற்று 'கால்ஷீட்' மோசடி நடிகர் துருவா சர்ஜா மீது வழக்கு
ரூ. 3 கோடி பெற்று 'கால்ஷீட்' மோசடி நடிகர் துருவா சர்ஜா மீது வழக்கு
ரூ. 3 கோடி பெற்று 'கால்ஷீட்' மோசடி நடிகர் துருவா சர்ஜா மீது வழக்கு
ADDED : ஆக 10, 2025 03:03 AM

பெங்களூரு : படத்தில் நடிப்பதாக 3.10 கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு, மோசடி செய்ததாக பிரபல கன்னட நடிகர் துருவா சர்ஜா மீது மும்பை போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது.
கன்னட திரையுலகின் பிரபலமான ஸ்டார் நடிகர்களில், துருவா சர்ஜாவும் ஒருவர். கோடிகளில் சம்பளம் வாங்குபவர்; இவரது திரைப்படங்கள் வசூலை அள்ளும்.
மும்பை கன்னடத்தில் ஜக்குதாதா என்ற படத்தை தயாரித்து, இயக்கிய ராகவேந்திர ஹெக்டே என்பவர், 'சோல்ஜர்' என்ற பெயரில் புதிய படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்தார். மும்பையின் 'ஆர்.ஹெச்., என்டர்டெயின்மென்ட் மற்றும் 'நந்தினி என்டர்பிரைசஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனங்களின் உரிமையாளர்.
தன் புதிய படத்தில் நாயகனாக நடிக்க, நடிகர் துருவா சர்ஜாவை ராகவேந்திர ஹெக்டே ஒப்பந்தம் செய்தார். முன் பணமாக 3.10 கோடி ரூபாய் அளித்திருந்தாராம். பணத்தை பெற்றுக் கொண்டு, துருவா சர்ஜா நடிக்க வரவில்லை என, மும்பையின் அம்போலி போலீஸ் நிலையத்தில் ராகவேந்திர ஹெக்டே புகார் செய்தார்.
புகாரின்படி துருவா சர்ஜா மீ து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த குற்றச்சாட்டை துருவா சர்ஜா மறுத்துள்ளார்.
முன் பணம் இதுகுறித்து, துருவா சர்ஜாவின் மேலாளர் அஸ்வின் நேற்று அளித்த பேட்டி:
கடந்த 2018ல் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராகவேந்திர ஹெக்டே, தன் புதிய படத்தில் நடிப்பதற்காக, தன் பட தயாரிப்பு நிறுவனங்கள் மூலமாக, நடிகர் துருவா சர்ஜாவுக்கு, 3.10 கோடி ரூபாய் முன்பணம் கொடுத்திருந்தார். பணம் கொடுத்து ஓராண்டாகியும் படப்பிடிப்பை துவக்கவில்லை. எனவே முதற்கட்டமாக 20 லட்சம் ரூபாயை, பட கம்பெனிக்கு திருப்பிக் கொடுத்தோம்.
அப்போது தயாரிப்பாளர், மூன்று மாதங்களில் ராணுவ வீரன் தொடர்பான கதையை தயார் செய்து வருவதாக கூறினார். அவரது அலுவலகம் மும்பையில் உள்ளது. நாங்கள் தொடர்பு கொள்ளும் போதெல்லாம், 'கதை தயாராகவில்லை' என்றே பதில் வந்தது.
கடந்த 2023ல் இ - மெயில் மூலமாக, படத்தின் முதல் பாதி கதையை அனுப்பினர். கதையை முழுமையாக ரெடி செய்ய, மேலும் மூன்று மாதங்கள் அவகாசம் கேட்டனர். எங்களை சந்திக்க முடியவில்லை என்பது, பொய்யான குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டு உண்மையென்றால், இத்தனை ஆண்டுகளுக்கு பின், கதை அனுப்பியது ஏன்? தயாரிப்பாளர், ஒரு நாள் எங்களை சந்தித்தார். அப்போது அவர், 'படத்தின் பட்ஜெட் அதிகமாகும். கன்னடத்தில் எடுத்தால் வியாபாரம் நடக்காது; தெலுங்கு அல்லது ஹிந்தியில் தயாரிக்கலாம். அதன்பின் கன்னடத்தில் 'டப்பிங்' செய்யலாம்' என்றார்.
இதற்கு துருவா சர்ஜா சம்மதிக்கவில்லை. 'கன்னடத்தில் நல்ல திரைப்படம் எடுத்தால், நிச்சயம் ஓடும்' என்றார். ஆனால் இதில் தயாரிப்பாளருக்கு உடன்பாடு இல்லை.
அமரன் நடப்பாண்டு 28ம் தேதி, பெங்களூரு வந்த அவர், 'நான் தயார் செய்து வைத்திருந்த கதை, அமரன் என்ற பெயரில் திரைப்படமாக வெளியானது. இப்போது புதிதாக எடுக்கும் படத்துக்கு, அக்டோபரில் கால்ஷீட் தாருங்கள்; அக்டோபரில் தெலுங்கில் தயாரிக்கலாம்' என்றார். அப்போதும் துருவா சர்ஜா சம்மதிக்கவில்லை.
இப்போது திடீரென, ராகவேந்திர ஹெக்டே, தான் கொடுத்த முன்பணத்தை வட்டியுடன் சேர்த்து 9.58 கோடியாக திருப்பித் தரும்படி, மும்பையின் அம்போலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இது தொடர்பாக எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை.
நாங்கள், அவரிடம் கடன் பெறவில்லை. தன் படத்தில் நடிக்க, முன்பணம் அளித்திருந்தார். படத்தில் நடிக்க முடியாது என்றோ, பணத்தை திருப்பித் தர முடியாது என்றோ, துருவா சர்ஜா கூறவில்லை. படத்தில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறார். ஆனால் தயாரிப்பாளருக்கு படம் எடுக்க விருப்பம் இல்லை. நாங்களும் சட்டப்படியே பதில் அளிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

