UPDATED : அக் 24, 2026 02:43 AM
ADDED : அக் 23, 2026 11:18 PM

சிக்கமகளூரு: சிக்கமகளூரு நகர பா.ஜ., இளைஞர் அணி தலைவர் ஜீவன். இவர் ஆயுத பூஜையன்று, சிக்கமகளூரு கோட்டே பகுதியில் உள்ள தனது வீட்டில், தன்னிடமுள்ள கைத்துப்பாக்கியால் வானை நோக்கி ஐந்து முறை சுட்டார். இதை 'இன்ஸ்டாகிராமில்' வீடியோவாக வெளியிட்டார்.
இவ்விஷயம் குறித்து, சிக்கமகளூரு நகர போலீசார் தாமாக முன்வந்து நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
'பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில், குடியிருப்புவாசிகள் அதிகமிருக்கும் பகுதியில் துப்பாக்கியால் சுட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக ஜீவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் வைத்திருந்த துப்பாக்கிக்கு உரிமம் உள்ளதா எனவும் விசாரிக்கப்படும். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் திடீரென துப்பாக்கியால் சுட்டு, வீடியோ வெளியிட்டதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்படும்' என, போலீசார் கூறினர்.
