/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெண்ணுக்கு கொலை மிரட்டல் 'பிலிம் சிட்டி' உரிமையாளர் மீது வழக்கு
/
பெண்ணுக்கு கொலை மிரட்டல் 'பிலிம் சிட்டி' உரிமையாளர் மீது வழக்கு
பெண்ணுக்கு கொலை மிரட்டல் 'பிலிம் சிட்டி' உரிமையாளர் மீது வழக்கு
பெண்ணுக்கு கொலை மிரட்டல் 'பிலிம் சிட்டி' உரிமையாளர் மீது வழக்கு
ADDED : அக் 27, 2025 03:53 AM

பெங்களூரு: தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கத்தில் உள்ள இ.வி.பி., பிலிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி, 45. இவரது மனைவி ஷீலா ரெட்டி; நடிகை.
சந்தோஷ் ரெட்டிக்கு தனது மகள் மூலம், பெங்களூ ரு சதாசிவநகரில் வசிக்கும் ஆடை வடிவமைப்பாளரான பார்வதி, 42 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவருக்கு திருமணம் முடிந்து, கணவர், இரண் டு பிள்ளைகள் உள்ளனர்.
கணவர் வெளியூரில் வேலை செய்வதால், இ ரண்டு பிள்ளைகளுடன், பார்வதி தனியே வசிக்கிறார். 'மகளுக்கு திருமணம் செ ய்து வைக்க வேண்டும்; நல்ல பையன் இருந்தால் சொல்லுங்கள்' என்று, பார்வதியிடம் சந்தோஷ் கூறி இருந்தார்.
இம்மாத து வக்கத்தில் பார்வதி வீட்டிற்கு சென்ற சந்தோஷ், 'நகை, பணத்தை எடுத்து கொண்டு, என் மகள் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்' என்று கூறி கண்ணீர் விட்டு உள்ளார்.
சந்தோஷுக்கு, பார்வதி ஆறுதல் கூறி உள்ளார். அப்போது, 'உன்னை காதலிக்கிறேன். என்னை திருமணம் செய்து கொள்கிறாயா' என்று, பார்வதியிடம் சந்தோஷ் கேட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த பார்வதி, மறுத்து விட்டார்.
'என்னை காதலிக்கா விட்டால் உன்னையும், உன் பிள்ளைகளையும் கொன்று விடுவேன்' என, சந்தோஷ் மிரட்டி இருக்கிறார். இதுகுறித்து கடந்த 14ம் தேதி வயாலிகாவல் போலீசில் பார்வதி புகார் செய்தார்.
வி சாரணை நடத்திய போலீசார், நேற்று முன்தினம் சந்தோஷ் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

