தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தீக்கருவி இல்லாத கட்டடங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு

 தீக்கருவி இல்லாத கட்டடங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு

 தீக்கருவி இல்லாத கட்டடங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு


ADDED : ஜூலை 18, 2026 11:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2026 11:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''தீயணைப்பு கருவிகள் இல்லாத அடுக்கு மாடி கட்டட உரிமையாளர்கள் மீது கிரிமி னல் வழக்குப்பதிவு செய்யப்படும்,'' என ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் கூறி உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பெங்களூரில் ஏராளமான அடுக்கு மாடி கட்டடங்கள் உள்ளன. பல கட்டடங்களில் தீயணைப்பு பாதுகாப்பு கருவிகள் இல்லை என தகவல் கிடைத்தது. இத்தகவல் உண்மை என்பதை, ஜி.பி.ஏ., அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

அனைத்து கட்டடங்களிலும் தீயணைப்பு பாதுகாப்பு கருவிகள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும். இதை கட்டட உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். வரும் நாட்களில் அடுக்கு மாடி கட்டடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்துவர்.

இந்த சோதனையின் போது, தீயணைப்பு கருவிகள் இல்லாத கட்டடத்தின் உரிமையாளர்கள் மீது கிரிமி னல் வழக்குப்பதிவு செய்யப்படும். பெங்களூரில் மிகப்பெரிய வணிக மையங்களில் ஒன்றான கே.ஆர்., மார்க்கெட்டில் தீயணைப்பு கருவிகளை நிறுவ தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பெங்களூரில் குடிநீர், வடிகால் பணிகள் நடக்கும் இடங்களில் அறிவிப்பு பலகைகள் கட்டாயம் இடம் பெற வேண்டும். இதை பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us