ADDED : ஜூலை 26, 2026 11:51 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு: நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, கடந்த 24ம் தேதி, பெங்களூரு சுதந்திர பூங்காவில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதில் பங்கேற்ற இளம்பெண் ஒருவர், டில்லி கலவர வழக்கில், தீவிரவாத செயல்களுக்காக குற்றஞ்சாட்டப்பட்ட உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு ஆதரவாக சுவரொட்டிகளை காட்டினார். அந்த சுவரொட்டியில் பெங்களூரு போலீசாரை அவமதிக்கும் வாசகமும் இருந்தது.
அந்த பெண்ணை, மாணவர்கள் திட்டி அங்கிருந்து அனுப்பினர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து உப்பார்பேட் போலீசார் தாமாக முன்வந்து இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்த பெண் யார் என்பதை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
