/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோலார் மாவட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு 25 வரை நீட்டிப்பு
/
கோலார் மாவட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு 25 வரை நீட்டிப்பு
கோலார் மாவட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு 25 வரை நீட்டிப்பு
கோலார் மாவட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு 25 வரை நீட்டிப்பு
ADDED : மே 17, 2025 11:19 PM
கோலார்: ''கோலார் மாவட்டத்தில் எஸ்.சி., ஜாதி கணக்கெடுப்பு வரும் 25ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது,'' என, மாவட்ட கலெக்டர் எம்.ஆர். ரவி தெரிவித்துள்ளார்.
கோலார் புறநகர் பகுதியில் உள்ள மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கோலார் மாவட்டத்தில் 3,04,738 குடும்பங்களின் கணக்கெடுப்புப் பணிகள் நடந்துள்ளன.
இவர்களில் 83,371 பேர் எஸ்.சி., பிரிவினர்; 2,21,367 பேர் மற்றவர்கள். மாவட்டத்தில் வசிப்போரில் 68.59 சதவீத கணக்கெடுப்பு முடிந்துள்ளது.
இதனால், 17ம் தேதி முடிவடைய வேண்டிய கணக்கெடுப்புப் பணிகள் 25ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணிகள் தொடரும். ஆன்லைனில் பதிவு செய்யவும் 28ம் தேதி வரையில் அவகாசம் உள்ளது.
எனவே, பணிகள் முழுமை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. கோலார் மாவட்டத்தில் உள்ள 1,538 ஓட்டுச்சாவடிகளில் கணக்கெடுப்பு பணிக்கு 1,699 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தலா 10 ஓட்டுச்சாவடிக்கு ஒரு மேற்பார்வையாளர் இருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, கோலார் ஜில்லா பஞ்சாயத்து தலைமை அதிகாரி பிரவீன் பி.பாகவாடி, மாவட்ட உதவி கலெக்டர் மங்களா, ஏ.எஸ்.பி., ரவிகாந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.