/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜாதிவாரி சர்வே பணி நிறைவு 6.13 கோடி பேர் பங்கேற்பு
/
ஜாதிவாரி சர்வே பணி நிறைவு 6.13 கோடி பேர் பங்கேற்பு
ஜாதிவாரி சர்வே பணி நிறைவு 6.13 கோடி பேர் பங்கேற்பு
ஜாதிவாரி சர்வே பணி நிறைவு 6.13 கோடி பேர் பங்கேற்பு
ADDED : நவ 01, 2025 04:25 AM
பெங்களூரு: கர்நாடகாவில் வீடு, வீடாக சென்று ஜாதிவாரி சர்வே எடுக்கும் பணி நேற்றுடன் நிறைவு பெற்றது. ஆறு கோடியே 13 லட்சத்து 83,908 பேர் சர்வேயில் பங்கேற்றுள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த மாதம் 22ம் தேதி ஜாதிவாரி சர்வே பணிகள் துவங்கின. ஆசிரியர்கள், பல்வேறு துறைகளில் பணி செய்வோர் என 2 லட்சம் பேர் சர்வே பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தசரா, தீபாவளி விடுமுறை நாட்களிலும் சர்வே பணி நடந்தது. அரசு பிறப்பித்த முதல் உத்தரவில் ஏழு நாட்களில் பணியை முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் அது முடியவில்லை. இதனால் சர்வே பணி தேதி நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் வீடு, வீடாக சென்று சர்வே எடுக்கும் பணி, நேற்றுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 6 கோடியே 85 லட்சத்து 38,000 பேரிடம் சர்வே நடத்த, அரசு இலக்கு நிர்ணயித்தது. இதில் 6 கோடியே 13 லட்சத்து 83,908 பேர் சர்வேயில் பங்கேற்று தங்களை பற்றிய தகவல் வழங்கி உள்ளனர். 4,22,258 வீடுகளை சேர்ந்தோர் சர்வேயில் பங்கேற்க மறுத்துவிட்டனர். 34 லட்சத்து 49,681 வீடுகள் பூட்டி இருந்ததால் அங்கு சர்வே நடக்கவில்லை என்று அரசு நேற்று அறிவித்துள்ளது.
சர்வேயில் பங்கேற்க மறுத்தோர், பூட்டப்பட்ட வீடுகளில் வசித்தோருக்கு கடைசி வாய்ப்பாக ஆன்லைன் மூலம் சர்வேயில் பங்கேற்கலாம் என்று அரசு அறிவித்திருக்கிறது. இதற்கும் கடைசி நாள் வரும் 10ம் தேதி. https://kscbcselfdeclaration.karnataka.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று தகவல்களை வழங்கலாம்.

