/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிரதமர் மோடி வருகை போக்குவரத்தில் மாற்றம்
/
பிரதமர் மோடி வருகை போக்குவரத்தில் மாற்றம்
ADDED : ஆக 10, 2025 08:47 AM
பெங்களூரு : பிரதமர் நரேந்திர மோடி வருவதால், இன்று பெங்களூரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோடே சுரங்கப்பாதை வழியாகவும், கோடே சதுக்கத்தில் இருந்து மஹாராணி பாலம் நோக்கி வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, எல்.டி.பி., சாலை, காட்டன் பேட்டை பிரதான சாலை, மைசூரு சாலை, மாகடி பிரதான சாலையில் வாகனங்கள் செல்லலாம்.
சாந்தாலா சந்திப்பில் இருந்து கோடே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்களுக்கு தடை; கோடே சந்திப்பில் இருந்து பி.எம்.டி.சி., - கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் செல்லும் வழியில் வாகனங்கள் செல்ல தடை. எல்.டி.பி., சாலை மற்றும் காட்டன் பேட்டை பிரதான சாலை வழியாக வாகனங்கள் செல்லலாம்.
மைசூரு வங்கியில் இருந்து சாளுக்கியா சதுக்கத்துக்கு வாகனங்கள் செல்ல தடை. கே.ஜி.,சாலை, மைசூரு வங்கி சதுக்கம், சாகர் சதுக்கம், எலைட், டி.பி., சாலை, ராஜிவ் சதுக்கம் நோக்கி செல்லலாம்.
கனகதாச சந்திப்பு, மவுரியா சதுக்கங்களில் இருந்து சுதந்திர பூங்கா நோக்கி வாகனங்கள் செல்ல தடை. கனகதாச சதுக்கத்தில் இருந்து வலதுபுறம் திரும்பி சாகர் சதுக்கத்துக்கும்; மவுரியா சதுக்கத்தில் இருந்து வலதுபுறம் திரும்பி ஆனந்த் ராவ் சதுக்கத்திற்கும் செல்லலாம்.
லால்பாக் மேற்கு கேட் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு தடை. ஜே.சி., சாலையின் வலதுபுறம் திரும்பி செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றம் காலை 9:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை அமலில் இருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.