தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கோலார் அரபிக் கொத்தனுாரில் தேர் திருவிழா கோலாகலம்

 கோலார் அரபிக் கொத்தனுாரில் தேர் திருவிழா கோலாகலம்

 கோலார் அரபிக் கொத்தனுாரில் தேர் திருவிழா கோலாகலம்


ADDED : ஜன 27, 2026 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 04:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோலார்: கோலாரின் அரபிக் கொத்தனுாரில் உள்ள ஸ்ரீ பிரசன்ன பார்வதி, ஸ்ரீ சோமநாதேஸ்வர சுவாமி பிரம்ம ரத உற்சவம் நேற்று முன் தினம் இரவு கோலாகலமாக நடந்தது.

கோலாரில் கோவில்கள் நகரம் என்று புகழப்படும் அரபிக் கொத்தனுாரில், ரத சப்தமி தேர் விழாவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றனர். சோமநாதேஸ்வரர், லட்சுமி வெங்கடேஸ்வரர், வீரபத்திரர், ஆஞ்சநேயர், வித்யா கணபதி, கரகத்தம்மா, ரேணுகா எல்லம்மா, சனீஸ்வரர், பட்டாளம்மா, குந்தகங்கம்மா, சித்தேஸ்வரர், சத்தியதேவி, பீமேஸ்வரர், அய்யப்பர் ஆகிய கோவில்களில் நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகள் நடந்தன.

பல ஆண்டுகளுக்கு முன் இக்கிராமத்தினர், ரத சப்தமி விழாவுக்கு முன் பொறிகளை அமைத்து, சிறுத்தைகளை பிடித்து, கிராமத்தின் வழியாக ஊர்வலமாக அழைத்து செல்வர். இந்த நடைமுறை, வனத்துறையின் விதிமுறைகளை பின்பற்றி கைவிடப்பட்டது.

ஆனாலும், பழையதை நினைவு கூறும் வகையில், தேர் திருவிழா நடத்துகின்றனர். இதையொட்டி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தேர் பவனி நடந்தது. பக்தர்கள் நேர்த்திக் கடனாக பழங்கள், வெற்றிலைகளை காணிக்கையாக செலுத்தினர். மலர் துாவினார். வழி நெடுகிலும் பக்தர்களுக்கு பானகம், தேனீர், மோர் வழங்கினர். அரபிக் கொத்தனுார் கிராமத்தை சுற்றியுள்ள பல குக்கிராமங்களை சேர்ந்தவர்களும் திருவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

கொத்தனுாரின் சமூக மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தேர் திருவிழாவிற்கு தலைமை அர்ச்சகர்கள் வேத பிரம்ம சத்திய சோமசேகர் தீட்சித், எஸ்.ஸ்ரீதரமூர்த்தி, எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி, செல்லங்கரே நாராயணாச்சார், வி.சுப்பிரமணியம், சோமநாதேஸ்வரர் கோவில் மேம்பாட்டு குழு அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us