UPDATED : நவ 21, 2026 12:00 AM
ADDED : நவ 20, 2026 08:00 PM

– நமது நிருபர் –
மாலை நேரம் டீயுடன் பஜ்ஜி, போண்டா சாப்பிட்டு போரடிக்கிறதா... சேமியா பக்கோடா சாப்பிட்டு பாருங்கள். சுவை அள்ளும். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து, எளிதில் இதை தயாரிக்கலாம்.
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில், தண்ணீரை கொதிக்க வைக்கவும். சேமியாவை மிருதுவாகும் வரை வேக வைக்கவும். அதன்பின் நீரை முழுமையாக வடித்து, சேமியாவை ஆற விடவும்.
சேமியா நன்கு வெந்த பின், சேமியாவை ஒரு பாத்திரத்தில் போடவும். அதில் சிறிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்துமல்லியை சேர்க்கவும். இந்த கலவையில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் துாள், மஞ்சள் துாள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கையால் பிசையவும். மாவு, பக்கோடா பதத்தில் இருக்க வேண்டும்.
அடுப்பில் வாணலி வைத்து, எண்ணெய் ஊற்றவும். சூடானதும் மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, எண்ணெயில் போடவும். பொன்னிறமாக வெந்ததும் டிஷ்யூ பேப்பர் மீது வைக்கவும். எண்ணெய் வடிந்த பின் பரிமாறவும். தக்காளி சாஸ் அல்லது தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
