ADDED : மே 09, 2026 02:14 AM

- நமது நிருபர் -: செட்டிநாடு ஸ்டைல் வாழைக்காய் வடையை, எளிய முறையில் வீட்டிலே செய்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்
வாழைக்காய்: 2
கடலை பருப்பு: 1 / 2 கப்
பெருஞ்சீரகம்: 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்: 4
பெரிய வெங்காயம்: 1
இஞ்சி: சிறிய துண்டு
கறிவேப்பிலை, கொத்துமல்லி: சிறிதளவு
உப்பு: தேவையான அளவு
எண்ணெய்: தேவையான அளவு
செய்முறை
முதலில் கடலை பருப்பை நன்றாக கழுவி, 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின், வாழைக்காயை தோலுடன் இரண்டாக வெட்டி, இட்லி பாத்திரத்தில் போட்டு, 7 நிமிடங்கள் வேக வைக்கவும். நீண்ட நேரம் வேக வைக்கக் கூடாது. வாழைக்காய் சூடு ஆறிய பிறகு, அதன் தோல்களை நீக்கி, துருவி கொள்ளவும்.
ஊற வைத்த கடலை பருப்புடன் பெருஞ்சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த பருப்பு விழுது, துருவிய வாழைக்காய், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
பிசைந்த கலவையை சிறு உருண்டை களாக எடுத்து, வடை போல தட்டி, சூடான எண்ணெயில் போடவும். வடை பொன்னிறமானதும் எடுக்கவும். அவ்வளவு தான், செட்டிநாடு ஸ்டைல் வாழைக்காய் வடை தயார்!

