ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் வீட்டில் ஆப்கனி பனீர் ரெசிப்பி செய்யலாமா?
ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் வீட்டில் ஆப்கனி பனீர் ரெசிப்பி செய்யலாமா?
ADDED : மே 09, 2026 02:14 AM

- நமது நிருபர் -
பொதுவாக நாம் வீட்டில் என்ன தான் சுவையாக சமையல் செய்தாலும், ரெஸ்டாரன்டிற்கு சென்று சாப்பிடுவது வேறு சுவையை தரும். ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் வீட்டிலேயே ஆப்கானி பனீர் ரெசிப்பி செய்வது எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பன்னீர்: 250 - 300 கிராம்
தயிர்: அரை கப்
மிளகு துாள்: ஒரு டீஸ்பூன்
கொத்துமல்லி இலை: கொஞ்சம்
பெரிய வெங்காயம்: மூன்று
பூண்டு: 6 பல்
இஞ்சி: சிறிய துண்டு
பச்சை மிளகாய்: மூன்று
மஞ்சள் துாள்: கால் டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் துாள்: ஒரு டீஸ்பூன்
சீரக துாள்: ஒரு டீஸ்பூன்
தனியார் துாள்: ஒரு டீஸ்பூன்
தேவையான அளவு நெய்
பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு
கசூரி மேத்தி: கொஞ்சம்
செய்முறை
கனமான கண்ணாடி பாத்திரத்தில் பெரிய துண்டாக நறுக்கிய பனீரை போட்டு உப்பு, மிளகு துாள், இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, பொடிசாக நறுக்கிய கொத்தமல்லி இலையை துாவி, நன்கு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். கண்ணாடி பாத்திரத்தை மூடி, 15 நிமிடங்கள் பனீர் கலவையை ஊற வைக்க வேண்டும்.
அடுப்பை, ஆன் செய்து கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம், தோல் உரித்த பூண்டு, இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தேவைப்பட்டால் கொஞ்சமாக உப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து கொள்ளலாம். நன்கு வதக்கியதும் அடுப்பை, ஆப் செய்து, ஆற வைக்க வேண்டும்.
ஆறிய பின், மிக்ஸி ஜாரில் போட்டு கெட்டி தயிரை சேர்த்து, மையாக அரைத்து எடுத்து கொள்ளவும். இந்த கலவையை சிறிய பாத்திரத்தில் ஊற்றி இதனுடன் உப்பு, மஞ்சள், காஷ்மீரி மிளகாய், மல்லி துாள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீரும் சேர்த்து கொள்ளலாம். இந்த கலவையை, 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
அடுப்பை மீண்டும் 'ஆன்' செய்து, எண்ணெய் ஊற்றி, ஊற வைத்த பனீர் கலவையை ரோஸ்ட் செய்ய வேண்டும். பனீர் நன்கு ரோஸ்ட் ஆனதும், ஒரு தட்டில் எடுத்து வையுங்கள். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய், கொஞ்சமாக நெய், பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், சீரகம் சேர்த்து நன்கு வதக்கி, மிக்ஸியில் அரைத்து, மசாலா துாள் சேர்த்து, 10 நிமிடங்கள் ஊற வைத்திருக்கும் கலவையை அதில் சேர்க்க வேண்டும்.
அடுப்பை மிதமாக சூட்டில் வைத்து, மசாலா கலவையை நன்கு கிளறுங்கள். பின், பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் போது, அதனுடன் ரோஸ்ட் செய்து வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து விட வேண்டும்.
கொஞ்சமாக கஸ்துாரி மேஸ்தியை கசக்கி போட்டால், சுவையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ஆப்கன் பனீர் ரெசிப்பி தயார். சப்பாத்தி, நாண் போன்றவற்றிற்கு சூப்பர் காம்பினேஷாகஇருக்கும்!
