ADDED : ஜூன் 06, 2026 03:48 AM

- நமது நிருபர் -: காலை சிற்றுண்டி புதுமையாகவும், ஆரோக்கியாகவும் இருக்க வேண்டும் என, விரும்புகிறீர்களா... அப்படியானால், முட்டை பரோட்டா செய்யலாமே. குட்டீஸ்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள்
l கோதுமை மாவு - அரை கப்
l வென்னீர் - தேவையான அளவு
l எண்ணெய் - 2 ஸ்பூன்
l முட்டைகள் - 2
l வெங்காயம் - 1
l பச்சை மிளகாய் - 1
l மிளகு - 1 ஸ்பூன்
l மஞ்சள் துாள் - 1 ஸ்பூன்
l உப்பு - தேவையான அளவு
l கொத்துமல்லி - ஒரு கைப்பிடி
l துருவிய கேரட் - 2 முதல் 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில், கோதுமை மாவை, போட்டு, சிறிதளவு உப்பு, தேவையான அளவு வென்னீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். அதன் மீது எண்ணெய் தடவி சிறிது நேரம் மூடி வைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி தழையை பொடியாக நறுக்கி வைக்கவும். குழந்தைகளுக்காக செய்தால், பச்சை மிளகாய் தேவையில்லை. மிளகு துாள் மட்டும் பயன்படுத்தலாம். பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, கல்லில் பரோட்டாவாக தட்டி கொள்ளவும்.
பரோட்டா மிருதுவாக இருக்க, தட்டிய பரோட்டாவில் எண்ணெய் தடவி பாதியாக மடித்து, மீண்டும் எண்ணெய் தடவ வேண்டும். இதை முக்கோண வடிவில் மடித்து தட்டி கொள்ளவும். அதன் பின், வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் தடவி காய்ந்ததும் பரோட்டாக்களை போட்டு, இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, மஞ்சள் துாள், மிளகு துாள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்றாக கலக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். சூடானதும் ஒரு கரண்டி முட்டை கலவையை ஊற்றவும். இதன் மேற்பகுதி ஈரமாக இருக்கும் போதே, அதன் மீது பரோட்டாவை போடவும். சில நிமிடங்கள் வேக வைத்தால், முட்டை பரோட்டா ரெடி.
சூடாக பரிமாறவும். தொட்டுக்கொள்ள புதினா சட்னி அல்லது காய்கறி சலாட் பொருத்தமாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்!
