ADDED : ஜூன் 06, 2026 03:48 AM

- நமது நிருபர் -:
தேவையான பொருட்கள்
l பழுத்த மாம்பழ விழுது - 1 கப்
l சோள மாவு - கால் கப்
l சர்க்கரை - அரை கப்
l தண்ணீர் - அரை கப்
l நெய் - 4 டேபிள் ஸ்பூன்
l ஏலக்காய் துாள் - அரை ஸ்பூன்
l முந்திரி, பாதாம் - கால் கப்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில், சோளமாவை போட்டு, தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைக்கவும். இதில் மாம்பழ விழுது, சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். மாம்பழத்தில் இனிப்பு குறைவாக இருந்தால், சர்க்கரையை கூடுதலாக சேர்க்கலாம்.
அடிப்பகுதி கனமான வாணலியை அடுப்பில் வைத்து, ஒரு ஸ்பூன் நெய் ஊற்றவும். வாணலி சூடானதும் கரைத்து வைத்துள்ள மாம்பழ கலவையை ஊற்றி, மிதமான தீயில் வைத்து, கை படாமல் கிளறவும். கலவை கெட்டியானதும் நெய்யை சிறிது, சிறிதாக ஊற்றி கிளறவும். அல்வா வாணலியில் ஒட்டாமல், சுருண்டு வரும் போது ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரி, பாதாமை சேர்த்து கிளறி, அடுப்பை அணைக்கவும்.
ஒரு தட்டில் நெய் தடவி, அல்வாவை ஊற்றி சமப்படுத்தவும்.
ஆறிய பின் உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் துண்டுகள் போட்டு பரிமாறவும். மாம்பழ அல்வாவை தயாரிக்க, அதிகபட்சம், 15 நிமிடம் போதுமானது. குட்டீஸ்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவர்!
