ADDED : நவ 18, 2025 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதி, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதி, 65. நேற்று மாலை மூச்சு விடுவதில் சிரமப்பட்டார். பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஐ.சி.யு.,வில் சிகிச்சை பெறுகிறார். டில்லியில் உள்ள முதல்வர், அங்கிருந்தே டாக்டர்களை தொடர்பு கொண்டு விசாரித்தார்.
மகன் யதீந்திரா கூறுகையில், ''என் தாயார் சுவாசப்பையில் நீர் நிரம்பியதால், மூச்சு விடுவதில் பிரச்னை ஏற்பட்டது. நாளை (இன்று) வரை மருத்துவமனையில் இருக்கும்படி டாக்டர்கள் கூறினர்,'' என்றார்.

