ADDED : நவ 16, 2025 11:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாதநாயக்கனஹள்ளி: காரை ரிவர்ஸ் எடுத்த தந்தையால், குழந்தை பலியானது.
பெங்களூரு நெலமங்களா பகுதியில் வசிப்பவர் மோகன். இவரது மகன் நுட்டன், ஒன்றரை வயது குழந்தையை எடுத்து கொண்டு, பேனகா லே - அவுட் குட்டஹள்ளியில் வசிக்கும் தனது அண்ணன் வீட்டிற்கு மோகன் நேற்று முன் தினம் சென்றிருந்தார். குழந்தை வெளியே விளையாடி கொண்டிருந்தது. இதை கவனிக்காத மோகன், தன் காரை ரிவர்ஸ் எடுத்தார். காருக்கு பின்னால், தனது மகன் நுட்டன் விளையாடி கொண்டிருப்பதை கவனிக்கவில்லை.
காரின் பின்பக்க சக்கரத்தில் குழந்தை சிக்கியது. பலத்த காயம் அடைந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மோகன், அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது.
மாதநாயக்கனஹள்ளி போலீசார் விசாரித்தனர்.

