/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வாளியில் கால் வைத்த குழந்தை: பெற்றோர் மீது மட்டையால் தாக்குதல்
/
வாளியில் கால் வைத்த குழந்தை: பெற்றோர் மீது மட்டையால் தாக்குதல்
வாளியில் கால் வைத்த குழந்தை: பெற்றோர் மீது மட்டையால் தாக்குதல்
வாளியில் கால் வைத்த குழந்தை: பெற்றோர் மீது மட்டையால் தாக்குதல்
ADDED : ஆக 18, 2025 03:22 AM
பேடரஹள்ளி விளையாடிய போது தண்ணீர் இருந்த வாளியில் குழந்தை கால் வைத்ததால் ஏற்பட்ட தகராறில், குழந்தையின் பெற்றோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
பெங்களூரு பேடரஹள்ளி வித்யமன்யாநகரில் வசிக்கும் கங்காதர் - சவுமியா தம்பதியின் நான்கு வயது குழந்தை, கடந்த 14 ம் தேதி வீட்டின் முன் விளையாடினார். பக்கத்து வீட்டின் ராஜேஸ்வரி என்பவர் தனது வீட்டின் முன்பு, வாளியில் தண்ணீர் பிடித்து வைத்திருந்தார். அந்த வாளிக்குள் குழந்தை கால் வைத்தது.
கோபம் அடைந்த ராஜேஸ்வரி, குழந்தையை ஆபாச வார்த்தையால் திட்டி உள்ளார். இதனை கவனித்த சவுமியா, ராஜேஸ்வரியிடம் சண்டை போட்டார். அன்று இரவு கங்காதர் வீட்டிற்கு சென்று, ராஜேஸ்வரியின் மகன் தகராறு செய்ததுடன், வீட்டின் ஜன்னல் கண்ணாடியை அடித்து உடைத்தார்.
பின், கங்காதரை வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து, கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். கணவரை காப்பாற்ற முயன்ற சவுமியாவையும் தாக்கினார். காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தாக்குதல் குறித்து கங்காதர், பேடரஹள்ளி போலீசில் நேற்று புகார் செய்தார். தாய் - மகன் மீது வழக்குப் பதிவானது.