sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

சினி கடலை

/

சினி கடலை

சினி கடலை

சினி கடலை


ADDED : ஏப் 05, 2025 12:26 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெட்டிக்குள் துாங்கும் படம்!

நடிகர் ரவிச்சந்திரன், எந்த படத்தில் நடித்தாலும், மிகவும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என, விரும்புவார். தான் நினைத்தபடி வரும் வரை, ரீ ஷூட் செய்வது அவரது பாணி. தற்போது மஞ்சினி ஹனி திரைக்கு வர, தாமதமாக இதுவே காரணம். 'சகுனி' என்ற படத்தை, அவர் ஆசையாக துவக்கினார். 40 சதவீதம் படப்பிடிப்பும் முடிந்தது.

ஆனால், படம் திரைக்கு வரவே இல்லை. இதில் அவரது கெட்டப் மாறுபட்டதாக இருந்தது. இது பற்றி அவர் கூறுகையில், ''படப்பிடிப்பு நடக்கும் போது, தயாரிப்பாளர் ராமு, என் வீட்டுக்கு வந்து 'சார், உங்களின் கெட்டப் எங்களுக்கு பிடிக்கவில்லை. தலைமுடியை முகத்தின் மீது விட்டுள்ளீர்கள். இது நன்றாக இல்லை' என்றார். அதன்பின் படத்தை பெட்டிக்குள் போட்டு விட்டேன்,'' என்றார்.

முதலில் பாடல் வெளியீடு

செபாஸ்டியன் டேவிட் இயக்கும், பென் டிரைவ் படப்பிடிப்பு முடிந்து, சென்சாருக்கும் சென்று வந்தது. படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். சர்வதேச திரைப்பட விழாவிலும் பங்கேற்று, பாராட்டு பெற்றுள்ளது. படத்தில் நடிகை மாலாஸ்ரீ, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இது குறித்து படக்குழுவினர் கூறுகையில், 'மாலாஸ்ரீ மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ராதிகா ராம், சஞ்சனா நாயுடு, அர்ச்சனா உட்பட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு இயக்குநர் செபாஸ்டியன் டேவிட் கதை, திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். படத்தை திரையிடும் முன்பே, பாடல்களை வெளியிட திட்டமிட்டு உள்ளோம்,'' என்றனர்.

தாமரை பற்றிய கதை

நடிகர் சுசேந்திர பிரசாத் இயக்கும், பத்மபகந்தி திரைப்பட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இது கன்னடம், சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகளில் தயாராகிறது. கதை குறித்து, சுசேந்திர பிரசாத் கூறுகையில், ''தேசிய மலரான தாமரை, புராண காலத்தில் இருந்தே, மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. போர்க் கலைகளிலும் தாமரையின் அடையாளம் உள்ளது.

''மஹாபாரத்திலும் பத்மவியூகம் என்ற விஷயம் உள்ளது. இத்தகைய மலரை பற்றிய சிறப்பான கதை கொண்ட படமாகும். லீலா ஆழமாக ஆய்வு செய்து, கதை எழுதியுள்ளார். தயாரிப்பாளரும் அவரே. மே மாதம் படத்தை திரைக்கு கொண்டு வருவோம்,'' என்றார்.

'ரீல்ஸ்' புள்ளிகளுக்கு வாய்ப்பு

நடப்பாண்டு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் திரைப்படம் கேடி. இதில் துருவா சர்ஜா, ரீஷ்மா நாணய்யா நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். இயக்குநர் பிரேம் கூறுகையில், ''படத்தின் பாடல் மட்டும் சமீபத்தில் வெளியிடப்பட்டன. பாடலை நானே எழுதினேன். அர்ஜுன் ஜன்யா இசை அமைப்பில், ராகுல் மாஸ்டர் நடன வடிவமைப்பில் அனைத்து பாடல்களும் அற்புதமாக வந்துள்ளன.

''இப்பாடலுக்கு ரசிகர்களே கொரியோகிராபர். பாடலுக்கு தகுந்தபடி நடனம் வடிவமைப்போரை தேர்வு செய்வோம். ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடக்கும் போது, அவர்களை வரவழைத்து கவுரவிப்போம். இப்பாடல் மூலம், ரீல்ஸ் செய்வோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

'பீச்'சை சுத்தம் செய்த நடிகை

பொதுவாக நடிகையர், சுற்றுலா சென்றால் விதவிதமான போட்டோக்கள் எடுத்து, சோஷியல் மீடியாவில் போடுவது வழக்கம். ஆனால் நடிகை சிந்து லோக்நாத், நற்செயலை செய்துள்ளார். இவர் சமீபத்தில், குமட்டாவின், கடலே கடற்கரைக்கு சென்றார். அங்கு குவிந்து கிடந்த குப்பையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இரண்டு நாட்கள் அங்கு தங்கி, 1 கி.மீ., வரை சென்று கடற்கரையை சுத்தம் செய்தார்.இதுகுறித்து சிந்து கூறுகையில், ''எனக்கு கோகர்ணா கடற்கரை மிகவும் பிடிக்கும்.

கடற்கரையில் சூர்ய அஸ்தமனத்தை பார்ப்பேன். முதன் முறையாக கடலே கடற்கரைக்கு வந்தேன். மிகவும் அசுத்தமாக இருப்பதை பார்த்து, வருத்தமாக இருந்தது. எனவே சுத்தம் செய்தேன்,'' என்றார்.

மனைவியுடன் தர்ஷன் சுற்றுலா

நடிகர் தர்ஷன் நடிக்கும், டெவில் படப்பிடிப்புக்காக, படக்குழுவினர் ராஜஸ்தானுக்கு சென்றுள்ளனர். கணவருக்கு துணையாக தர்ஷனின் மனைவி விஜயலட்சுமியும் சென்றுள்ளார். ஓய்வு நேரத்தில் இங்குள்ள அழகான இடங்களை சுற்றி பார்க்கின்றனர்.

ராஜஸ்தானின் பிரமாண்டமான அரண்மனை முன் நின்று, விஜயலட்சுமி போட்டோக்கள் எடுத்து கொண்டார். இவற்றை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பாராட்டி கமென்ட் போட்டுள்ளனர். ராஜஸ்தானின், உதயப் பூரில் படப்பிடிப்பு முடிந்துள்ளதால், படக்குழு வினர் இன்று பெங்களூரு திரும்புகின்றனர்.






      Dinamalar
      Follow us