சுதந்திர போராட்டத்தில் கிறிஸ்துவர் பெங்களூரில் இன்று கருத்தரங்கம்
சுதந்திர போராட்டத்தில் கிறிஸ்துவர் பெங்களூரில் இன்று கருத்தரங்கம்
UPDATED : அக் 17, 2026 12:00 AM
ADDED : அக் 16, 2026 11:54 PM
பெங்களூரு: இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில், கிறிஸ்துவர்கள் பங்களிப்பு குறித்து விவாதிக்கும் வகையில், பெங்களூரு லால்பாக் சாலையில் உள் ள, புனித வளனார் பல்கலைக்கழக வளாகத்தின் சேவியர் அரங்கில், ‘தேசத்தை உருவாக்குவதில் கிறிஸ் து வ குரல்கள், தென்னிந்தியாவின் மறக்கப்பட்ட வரலாறுகள்’ என்ற தலைப்பில் இன்று கருத்தரங்கு நட க்கிறது.
காலை 9:00 மணிக்கு துவங்கும் கருத்தரங்கை, பெங்களூரு உயர் மறை மாவட்ட துணை பேராயர் ஆரோக்கியராஜ் சதீஷ்குமார், பல்கலைக்கழகத்தின் வேந்தர் டயோனிசியஸ் வாஸ், துணைவேந்தர்கள் விக்டர் லோபோ, மெல்வின் பின்டோ, கர்நாடக கிறிஸ்துவர் வளர்ச்சி கழக தலைவர் ஜாபெட் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை, பல்கலைக் கழகத்தின் மதம் மற்றும் கலாசார துறையின் இயக்குனர் பாலகிரண்குமார் ஹிருதயராஜ் மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.
