/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோலார் காங்.,கில் மோதல்? கொத்துார் மஞ்சுநாத் மறுப்பு!
/
கோலார் காங்.,கில் மோதல்? கொத்துார் மஞ்சுநாத் மறுப்பு!
கோலார் காங்.,கில் மோதல்? கொத்துார் மஞ்சுநாத் மறுப்பு!
கோலார் காங்.,கில் மோதல்? கொத்துார் மஞ்சுநாத் மறுப்பு!
ADDED : ஜூலை 01, 2025 03:44 AM
கோலார்: ''கோலார் மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,களிடையே கருத்து வேறுபாடு, மோதல்கள் இல்லை,'' என, கோலார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத் தெரிவித்தார்.
அமைச்சர்கள் மீது அதிருப்தி, ஊழல் குற்றச்சாட்டுகள், நிதி ஒதுக்கீடு குளறுபடி உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தால் நேரில் தெரிவிக்கலாம் என, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,களுக்கு, கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சுர்ஜித் வாலா அழைப்பு விடுத்திருந்தார்.
இதுதொடர்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், 'யார், எப்போது சந்திக்க வேண்டும்' என்ற பட்டியலிட்டு, தொலைபேசி மூலம் எம்.எல்.ஏ.,க்களுக்கு தகவல் தெரிவித்திருந்தார்.
இதன்படி, கோலார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத், நேற்று மாலையில், பெங்களூரில் சுர்ஜித் வாலாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு, 15 நிமிடம் நடந்தது.
பின்னர் மஞ்சுநாத் கூறியதாவது:
மேலிட பொறுப்பாளரிடம் யார் மீதும் புகார் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. கோலார் மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். இதில் மாறுபட்ட கருத்து இல்லை. டி.சி.சி., வங்கி, கோமுல் தேர்தலில் எம்.எல்.ஏ.,க்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. மேலிட பொறுப்பாளருக்கு தெரிவிக்க வேண்டிய பெரிய விஷயமே இல்லை; பேசி தீர்த்துக் கொள்ள முடியும்.
வாரந்தோறும் வெள்ளியன்று முதல்வர், துணை முதல்வரை சந்தித்து வருகிறேன். தொகுதி மேம்பாட்டுக்கு தேவையான எல்லா வசதிகளும் செய்து கொடுக்கின்றனர். மாவட்ட பொறுப்பு அமைச்சர் பைரதி சுரேஷ் அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படுகிறார். அவர் மீது குற்றச்சாட்டுகள் கூறுவது தவறு.
இவ்வாறு அவர் கூறினார்.