UPDATED : நவ 13, 2026 12:00 AM
ADDED : நவ 12, 2026 11:54 PM
பெங்களூரு: பெங்களூரில் 45 ஆயிரம் சாலை பள்ளங்களை இம்மாத இறுதிக்குள் மூட வேண்டும் என, ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வரராவ் கெடு விதித்துள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன், பெங்களூரில், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலை பள்ளங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவற்றை மாத இறுதிக்குள் மூட வேண்டும் என்று, ஐந்து மாநகராட்சிகளின் கமிஷனர்களுக்கு கெடு விதித்து உள்ளேன்.
பிரதான, துணை சாலைகளை பள்ளங்கள் இல்லாத சாலையை மாற்ற திட்டமிட்டு உள்ளோம்.
சில ஒப்பந்ததாரர்கள் பணிகள் மேற்கொள்கிறோம் என்ற பெயரில் சாலைகளை தோண்டி அப்படியே விட்டு செல்கின்றனர். இனிமேல் சாலையில் பள்ளம் தோண்ட ஜி.பி.ஏ., அனுமதி அவசியம்.
இதனை மீறுவோர் சாலை சீரமைப்புக்கான முழு செலவையும் ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
