பிரார்த்தனை செய்யுங்கள் தர்ஷன் ரசிகர்களிடம் முதல்வர் வேண்டுகோள்
பிரார்த்தனை செய்யுங்கள் தர்ஷன் ரசிகர்களிடம் முதல்வர் வேண்டுகோள்
ADDED : ஆக 05, 2026 11:09 PM

ராம்நகர்: ''பிரார்த்தனை தோல்வியே அடையாது,'' என, சிறையில் உள்ள நடிகர் தர்ஷன் ரசிகர்களிடம் கூறிய முதல்வர் சிவகுமார், அவர்களை தொடர்ந்து பிரார்த்திக்க கூறினார்.
ராம்நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த சாமுண்டீஸ்வரி கரக மஹோத்சவம் நிகழ்ச்சியில், முதல்வர் சிவகுமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசி கொண்டிருக்கும் போது. அங்கு வந்திருந்த நடிகர் தர்ஷனின் ரசிகர்கள், தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
இதனால், சிறிது நேரம் தன் பேச்சை சிவகுமார் நிறுத்தினார். பின், அவர் பேசியதாவது:
உங்கள் உணர்வுகளை நான் புரிந்து கொண்டேன். ஆனால் நான் என்ன நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன் என்று நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அனைவரும் அமைதியாகவும், பொறுமையுடனும் காத்திருங்கள்.
தர்ஷன் வழக்கு விவகாரத்தில் எனக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள். இது இங்கு பேச வேண்டிய விஷயம் இல்லை. சட்டம் சம்பந்தப்பட்டது. நீங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். முயற்சி தோல்வி அடையும். பிரார்த்தனை தோல்வியே அடையாது.
இவ்வாறு முதல்வர் சிவகுமார் பேசினார்.
