திம்மப்பாவுக்கு ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்ய முதல்வர் உறுதி
திம்மப்பாவுக்கு ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்ய முதல்வர் உறுதி
UPDATED : நவ 01, 2026 12:00 AM
ADDED : அக் 31, 2026 09:06 PM

ஷிவமொக்கா: ராஜ்யோத்சவா விருது அறிவிக்கப்பட்டுள்ள, முன்னாள் சபாநாயகர் காகோடு திம்மப்பாவை, பெங்களூருக்கு அழைத்து வர ஹெலிகாப்டர் அனுப்புவதாக, அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதை திம்மப்பா ஏற்க மறுத்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் காகோடு திம்மப்பாவுக்கு, ராஜ்யோத்சவா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிவமொக்கா மாவட்டம், சாகரா நகரில் உள்ள திம்மப்பாவின் வீட்டுக்கு, மாவட்ட பொறுப்பு அமைச்சர் மது பங்காரப்பா, நேற்று சென்று, திம்மப்பாவுக்கு, வாழ்த்து கூறினார்.
அப்போது வீடியோ அழைப்பு வாயிலாக, இவருடன் பேசிய முதல்வர் சிவகுமார், ஹெலிகாப்டர் அனுப்புவதாக கூறி, நிகழ்ச்சிக்கு வரும்படி அழைத்தார். ஆனால், ஹெலிகாப்டரை வேண்டாம் என, மறுத்த திம்மப்பா எப்படியாவது நிகழ்ச்சிக்கு வருவதாக கூறியுள்ளார்.
அமைச்சர் மது பங்காரப்பா கூறுகையில், ‘‘வயது முதிர்வு காரணமாக, உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு, திம்மப்பா வீட்டில் ஓய்வு எடுக்கிறார். அவர் பெங்களூருக்கு வந்து, விருது பெறுவதில் அவருக்கு பிரச்னை ஏற்படலாம். இதை மனதில் கொண்டு, அரசே அவரது வீட்டுக்கு சென்று விருது வழங்கும்,’’ என்றார்.
