UPDATED : நவ 01, 2026 12:00 AM
ADDED : அக் 31, 2026 09:06 PM

அ நிறம் | அளவு
தங்கவயல்: இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின், 151-வது பிறந்தநாள் விழாவையொட்டி, தங்கவயல் போலீஸ் மாவட்ட அலுவலகத்தில் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
தங்கவயல் எஸ்.பி., ஷிவான்ஷு ராஜ்புத் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. டி.எஸ்.பி., வி.லட்சுமையா, மாவட்ட அலுவலக உதவி நிர்வாக அதிகாரி ஜி.விஸ்வநாத் மற்றும் மாவட்ட போலீஸ் அலுவலக அதிகாரிகள், போலீசார் பங்கேற்றனர்.
