தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அரசு பள்ளிகளை தத்தெடுக்க வேண்டும் தனியார்களுக்கு முதல்வர் அழைப்பு

 அரசு பள்ளிகளை தத்தெடுக்க வேண்டும் தனியார்களுக்கு முதல்வர் அழைப்பு

 அரசு பள்ளிகளை தத்தெடுக்க வேண்டும் தனியார்களுக்கு முதல்வர் அழைப்பு


ADDED : ஜூலை 25, 2026 11:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2026 11:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சித்ரதுர்கா: ''நகர்ப்புறங்களில் உள்ள சிறந்த தனியார் பள்ளிகள், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள அரசு பள்ளிகளை தத்தெடுத்து, ஆசிரியர்களை நியமித்து, தங்கள் பள்ளியில் வழங்கும் தரமான கல்வியை, கிராமப்புற குழந்தைளுக்கும் வழங்க வேண்டும்,'' என, முதல்வர் சிவகுமார் அழைப்பு விடுத்தார்.

சித்ரதுர்கா மாவட்டம், ஹரியூரில் உள்ள வேதவதி அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:

நகர்ப்புறங்களில் உள்ள சிறந்த தனியார் பள்ளிகள், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள அரசு பள்ளிகளை தத்தெடுத்து, ஆசிரியர்களை நியமித்து, தங்கள் பள்ளியில் வழங்கும் தரமான கல்வியை, கிராமப்புற குழந்தைளுக்கும் வழங்க வேண்டும்.

தனியார் பள்ளிகள் என்றால், அ னைத்து பள்ளிளும் தத்தெடுக்கும் என்று அர்த்தமல்ல. இதற்கென சில நிபந்தனைகள் உள்ளன.

சி.எஸ்.ஆர்., எனும் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியை இவ்வாறு செலவழித்தால், துவக்க கல்வி வலுப்படும். கிராமப்புற குழந்தைகள் கல்விக்காக நகரங்களுக்கு இடம் பெயரக்கூடாது.

அவர்களும் பெங்களூரு தரத்திலான கல்வியை பெற வேண்டும் என்பதே என் விருப்பம். இருப்பினும், தரமான கல்வியை வழங்குவது கடினமாகி வருகிறது. அதற்காக தான், தனியார் நபர்களுடன் பேச்சு நடத்தி உள்ளேன்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us