தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பட்ஜெட்டில் கர்நாடகாவுக்கு அநீதி முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு

 பட்ஜெட்டில் கர்நாடகாவுக்கு அநீதி முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு

 பட்ஜெட்டில் கர்நாடகாவுக்கு அநீதி முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு


ADDED : பிப் 02, 2026 04:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 04:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கலபுரகி: மத்திய பட்ஜெட்டில் கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு வைத்து உள்ளார்.

இது குறித்து, கலபுரகியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது.பட்ஜெட்டில்தொலைநோக்கு பார்வை எதுவும் இல்லை. இது பட்ஜெட் இல்லை; வெறும் அறிக்கை.

தென் மாநிலங்களுக்கு பட்ஜெட்டில்,பெங்களூரு- - சென்னை மற்றும் ஹைதராபாத்- - பெங்களூரு அதிவேக ரயில் பாதைகள் ஆகிய இரண்டு திட்டங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளன. இது கர்நாடகாவிற்கு எந்தப் பலனையும் அளிக்காது. மாறாக, தெலுங்கானா, தமிழகத்துக்கே அதிக நன்மையை ஏற்படுத்தும்.

மேகதாது, மகதாயி போன்ற நதி நீர் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில், மத்திய அரசு தாமதம் காட்டுவது சரியல்ல. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் வளர்ந்த இந்தியாவைப் பற்றிப் பேசியுள்ளார். இது வெறும் பேச்சு மட்டுமே. மாநிலத்தின் நீர்ப்பாசனத் திட்டங்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்த பட்ஜெட்டில் கர்நாடகாவுக்கு எதுவும் கிடைக்கவில்லை. தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன. கர்நாடகா தனிநபர் வருமானத்தில் முதலிடத்தில் உள்ளது. ஜி.எஸ்.டி., வசூலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

மாநில அரசு 100 ரூபாய் கொடுத்தால், 14 ரூபாய் மட்டுமே மத்திய அரசு தருகிறது. இந்த பட்ஜெட் கர்நாடகாவுக்கு அநீதி இழைத்து உள்ளது. பா.ஜ., அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us