தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெற்றோர், தங்கையை கொன்றது ஏன்? கைதான வாலிபர் 'திடுக்' வாக்குமூலம்

 பெற்றோர், தங்கையை கொன்றது ஏன்? கைதான வாலிபர் 'திடுக்' வாக்குமூலம்

 பெற்றோர், தங்கையை கொன்றது ஏன்? கைதான வாலிபர் 'திடுக்' வாக்குமூலம்


ADDED : பிப் 02, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 05:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விஜயநகரா: கொட்டூரில் தன் தந்தை, தாய், தங்கையை வாலிபர் கொலை செய்ததற்கு, உண்மையான காரணம் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

விஜயநகரா மாவட்டத்தின், கொட்டூரில் வசித்தவர் பீமராஜ், 52. இவரது மனைவி ஜெயலட்சுமி, 45. தம்பதிக்கு அக்ஷய்குமார், 25, என்ற மகனும், அம்ருதா, 18, என்ற மகளும் உள்ளனர்.

ஜனவரி 30ம் தேதியன்று, பெங்களூரின், திலக் நகர் போலீஸ் நிலையத்துக்கு வந்த அக்ஷய் குமார், 'என் தந்தை இதய நோய் சிகிச்சை பெற, பெங்களூரின், ஜெயதேவா மருத்துவமனைக்கு வந்தார்.

அவருடன் என் தாயும், தங்கையும் வந்தனர். ஆனால் அவர்கள் மீண்டும் வீட்டுக்கு வராமல், காணாமல் போய்விட்டனர்' என புகார் அளித்தார்.

அவரது பேச்சில் குழப்பங்கள் தென்பட்டதால், சந்தேகமடைந்த போலீசார் விசாரித்த போது, தன் தந்தை, தாய், தங்கையை கொலை செய்து, வீட்டுக்குள் புதைத்திருப்பதாக கூறினார்.

இதையடுத்து திலக் நகர் போலீசார், சித்ரதுர்கா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இரண்டு நகரங்களின் போலீசாரும், நேற்று முன்தினம் மதியம், கொட்டூருக்கு சென்று புதைக்கப்பட்ட மூன்று பேரின் உடல்களையும் தோண்டி எடுத்தனர்.

இந்த கொலைக்கு உண்மையான காரணத்தை தெரிந்து கொள்ள, அக்ஷய் குமாரை விசாரித்த போது உண்மையை கூறினார். இவரது தங்கை அம்ருதா, பி.யு.சி., படிக்கும் மாணவரை காதலித்தார்.

தங்கையின் மொபைல் போனை சோதித்து பார்த்த போது, இந்த விஷயம் தெரிந்தது. தங்கையை அக்ஷய் குமார் தாக்கி, மிரட்டினார். அதன்பின் காதலிப்பது இல்லை என, தங்கை கூறினார்.

ஆனால் அம்ருதா, மாணவருடன் நெருங்கி பழகியதில் கர்ப்பமடைந்தார். ஜனவரி 26ம் தேதி, இந்த விஷயத்தை மகனிடம் தாய் ஜெயலட்சுமி கூறினார். இதனால், கோபத்தில் கொந்தளித்த அக்ஷய், உடனடியாக கருக்கலைப்பு செய்யலாம் என, பலவந்தப்படுத்தினார்.

இதற்கு தாயும், தந்தையும் சம்மதிக்கவில்லை. குடும்ப கவுரவத்தை குலைத்ததால், தந்தை, தாய், தங்கையை தீர்த்து கட்டியதை அக்ஷய் ஒப்புக்கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us