ADDED : ஏப் 11, 2026 04:11 AM

---நமது நிருபர்- -
மட்டன் விலை அதிகமாக இருக்கும் என்பதால், அசைவ பிரியர்களின் முதல் சாய்ஸ் ஆக, சிக்கன் தான் இருக்கும். சிக்கனை வைத்து தேங்காய் பால் கோழி குழம்பு செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
*அரை கிலோ கோழி கறி
* ஒரு கப் கெட்டியான தேங்காய் பால்
* இரண்டு வெங்காயம்
* ஒரு தக்காளி
* இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
* மஞ்சள் துாள் கால் டீஸ்பூன்
* மிளகாய் துாள் ஒரு டீஸ்பூன்
* மல்லி துாள் இரண்டு டீஸ்பூன்
* கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
செய்முறை
அடுப்பை ஆன் செய்து வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு தாளிக்கவும். பொடிசாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி, சிக்கன் துண்டுகளை சேர்த்து, மஞ்சள் துாள், உப்பு துாவி 5 முதல் 7 நிமிடங்கள் வதக்கவும்.
பின், தக்காளி, மிளகாய், மல்லி துாள்கள், கரம் மசாலா சேர்த்து வதக்கி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி தட்டை மூடி 15 நிமிடம் வேக வைக்கவும்.
கோழி கறி வெந்ததும், கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
கொத்துதமல்லி இலையை பொடிசாக நறுக்கி குழம்பில் துாவி விட்டு இறக்கினால் போதும். சூப்பரான தேங்காய் பால் கோழி குழம்பு ரெடி.

